திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் இன்று சாமி தரிசனம் செய்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருப்பதிக்கு குடும்பத்தினருடன் வருகை தந்தார். திருப்பதி வரும் வழியில் பல இடங்களில் அதிமுகவினர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பதியில் மேளதாளங்கள் முழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு 7 மணியளவில் வராக சுவாமி கோவில் மற்றும் ஹயக்ரீவர் கோவில் ஆகியவற்றில் குடும்பத்தினருடன் அவர் தரிசனம் செய்தார்.

ஒருபக்கம் முதல்வர் பதவியை தந்துவிட்டு.. இன்னொரு பக்கம் செக் வைத்த அமித் ஷா.. நிதிஷுக்கு செம சிக்கல்!
இன்று அதிகாலையில் அஷ்டதாள பாத பத்ம ஆராதனை நிகழ்ச்சியிலும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து திருப்பதியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார்.

