திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருப்பதி டிக்கெட் முன்பதிவு.. இன்று முதல் புதிய இணையதள முகவரி மாற்றம்

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது.

திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த மார்ச் மாதம் 15 தேதிக்கு பிறகு அனைத்து தரிசனங்களும் கொரோனா முன்னெச்சரிக்கைக்காக நிறுத்தப்பட்டன. ஏழுமலையானை தரிசனம் செய்து 64 நாட்கள் ஆன நிலையில் பெரும்பாலான பக்தர்கள் இ உண்டியல் காணிக்கைகள் மூலம் செலுத்தி வருகிறார்கள்.

TTD creates new website for darshan booking

அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆந்திராவின் பல பகுதிகளிலும் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்ய தேவஸ்தானம் முன் வந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 13 தேவஸ்தான மாவட்ட மையங்களில் லட்டு விற்பனை வரும் 25 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

லாக்டவுன் காரணமாக லட்டு விலையை ரூ 50-இல் இருந்து ரூ 25-க்கு தேவஸ்தானம் குறைத்துள்ளது. ஏழுமலையான தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படும் வரை இந்த விலை குறைப்பு அமலில் இருக்கும் என தேவஸ்தான் தெரிவித்துள்ளது. அது போல் பெரிய லட்டுவின் விலையும் ரூ 200-இல் இருந்து ரூ 100-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

உங்கள் பொருளாதார பேக்கேஜ் பலனில்லை .. ஆர்பிஐ ஆளுநர் இப்படி சொல்லிட்டாரே.. ப.சிதம்பரம் சரமாரி கேள்விஉங்கள் பொருளாதார பேக்கேஜ் பலனில்லை .. ஆர்பிஐ ஆளுநர் இப்படி சொல்லிட்டாரே.. ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

லட்டு வாங்க வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அந்தந்த மாநிலங்களிடம் ஒப்புதல் பெற்றவுடன் சென்னை, ஹைதராபாத், பெங்களூரில் லட்டு விற்பனை தொடங்கப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

TTD creates new website for darshan booking

ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய தேவஸ்தானம் https://ttdsevaonline.com என்ற இணையதளத்தை உருவாக்கியது. இந்த இணையதளத்தை பக்தர்கள் ஏழுமலையானை விரைவு தரிசனம் செய்யவும் வாடகை அறை முன் பதிவு செய்யும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த இணையதள முகவரியை தேவஸ்தானம் மாற்றியுள்ளது. அதன்படி பக்தர்கள் இனி https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று முதல் இந்த இணையதளம் செயல்பட தொடங்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பழைய முகவரியை கொடுத்தாலும் புதிய முகவரிக்கு வாடிக்கையாளரை அழைத்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

English summary
Tirumala Tirupati Devasthanam creates new website for booking online ticket for online darshan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X