திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அது பாட்டுக்கு போகுது.. பெருமாளை கும்பிட வந்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்.. திருப்பதியில்..!

திருப்பதியில் காட்டு பன்றிகள் நடமாட்டம் இருந்துள்ளது

Google Oneindia Tamil News

திருப்பதி: பெருமாளை கும்பிட வந்த பக்தர்கள், திடீரென அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.. அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோதுதான் விஷயமே தெரியவந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போவது வழக்கம்.. ஆனால் இந்த திருமலையை சுற்றிலும் காட்டுப் பகுதிகள் உள்ளன.. இதற்கு சேஷாசலம் என்று பெயர்.. இங்கு புலி, யானைகள், மான்கள், நரி, ஓநாய், கரடி போன்ற வனவிலங்குகளும் வாழ்ந்து வருகின்றன.

Wild boars entered at Tirumala and CCTV Footage released

சில சமயங்களில் இந்த விலங்குகள் திடீரென கோயில் பகுதிகளுக்கும் புகுந்து விடுவது உண்டு... இதனால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.. பலர் தேவஸ்தானத்திடம் புகாரும் சொன்னார்கள்.

அதன்படி, விலங்குகள் ஏதேனும் கோயில் பகுதியில் வருகிறதா என்பதை அறிய, சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டன.. அந்த கேமிராவில் விலங்குகள் வருவது தெரிந்தால், அவைகளை உடனடியாக வன ஊழியர்கள் காட்டுக்குள் விரட்டி அடித்துவிடுவார்கள். அதனால் கொஞ்ச நாளைக்கு பயமில்லாமல் பக்தர்கள் வந்து சென்றனர்.

ஆனால், கொஞ்ச காலமாகவே இந்த பணிகளை சரியாக கவனிக்கவில்லை என தெரிகிறது.. காட்டு பன்றிகள் கோயில் பக்கம் வந்து போயுள்ளன... காட்டுக்குள் போதிய சாப்பாடு கிடைக்காமல், அவை திருமலையின் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளன.. இதை பார்த்து பக்தர்களும் அலறி அடித்து கொண்டு ஓடியுள்ளனர்.. இவை எல்லாமே அந்த கேமிராக்களில் பதிவாகி உள்ளன.

அதுமட்டுமல்ல, கோயில் பகுதிகளில் குப்பைகளை சரியாக கொட்டுவதில்லையாம்.. அங்கேயே அவை தேங்கி கிடக்கின்றன.. அந்த குப்பைகளில் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று தேடி காட்டுப் பன்றிகள் வந்து போயுள்ளது.. 2 நாட்களுக்கு முன்புதான் அவைகள் அங்கு நடமாடி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த போட்டோக்களும், வீடியோவும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.. இதையடுத்து, திருமலையின் நான்கு மாட வீதிகளில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மறுபடியும் ஆய்வு செய்ததில், அந்த காட்டு பன்றிகள் மறுபடியும் வனப்பகுதிக்குள் திரும்பியது தெரியவந்தது. இனி இதுபோன்று நடக்காதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று வனத்துறையினரும், தேவஸ்தானம் தரப்பிலும் உறுதி தரப்பட்டுள்ளது.

English summary
Wild boars entered at Tirumala and CCTV Footage released
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X