திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விளையாட்டு வினையானது.. போதையில் தூக்கிட்டு கொள்வதாக வீடியோ மூலம் விளையாடிய இளைஞர் பலி

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதியில் குடிபோதையில் நண்பருடன் செல்பி வீடியோ மூலம் தூக்கு போட்டுக் கொள்வதாக நாடகமாடிய மெக்கானிக் பரிதாப மரணமடைந்தார்.

திருப்பதி சமீபத்திலுள்ள திருச்சானூரில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தவர் சிவக்குமார் (25). கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மது அருந்திவிட்டு முழு போதையில் இருந்தார் சிவகுமார்.

திருப்பதியில் வசிக்கும் தன்னுடைய நண்பருக்கு வீடியோ கால் செய்து தூக்கு மாட்டி மரணமடைய போவதாக கூறினார். பின்னர் வீட்டில் இருந்த கட்டில் மேல் ஏறி மின்விசிறியில் சேலையை கட்டி கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார்.

எட்டு வழிச்சாலையை வைத்து.. மீண்டும் வெடித்தது அரசியல் வார்த்தைப் போர்..!எட்டு வழிச்சாலையை வைத்து.. மீண்டும் வெடித்தது அரசியல் வார்த்தைப் போர்..!

நண்பர்கள்

நண்பர்கள்

பின்னர் கட்டிலில் இருந்து காலை எடுத்து கீழே தொங்க விட்டு சேலையை பிடித்துக் கொண்டு தூக்கு போட்டு கொள்வதாக நாடகம் ஆட முயன்றார். மேலும் சேலையை இறுக்குவதும் லூஸ் செய்வதுமாக இருந்தார். இவர் சிரித்து கொண்டே கூறியதால் நாடகமாடுவதாக நண்பர்கள் நினைத்து கொண்டனர்.

சேலை இறுகியது

சேலை இறுகியது

பின்னர் கழுத்தில் கயிறு இறுகியதை கண்ட சிவக்குமார் சேலையை விலக்க எவ்வளவு முயற்சித்தும் போதையில் இருந்ததால் முடியவில்லை. இதனால் எதிர்பாராதவிதமாக சிவக்குமார் கழுத்தில் சேலை பலமாக இறுகி கொண்டது.

சிவக்குமார் உடல்

சிவக்குமார் உடல்

இதனால் மூச்சுவிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சிவகுமார் பரிதாபமாக மரணம் அடைந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருச்சானூர் போலீசார் விரைந்து சென்று சிவக்குமார் உடலை கைப்பற்றினர்.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக போதையால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதால் தற்கொலைக்கு காரணமாகியிருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

English summary
A youth who tried to enact a prank suicide act fell victim to it in Tirupati.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X