திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

70 நாட்களில் 2ஜி வழக்கு விசாரணை- தமிழகத்தில் 2 லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல்.. ஹெச். ராஜா ஆரூடம்

Google Oneindia Tamil News

திருப்பூர்: 2ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணை இன்னும் 70 நாட்களில் தொடங்குவதால் தமிழகத்தில் 2 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.

Recommended Video

    தமிழகத்தில் 2 லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல்.. ஹெச். ராஜா ஆரூடம் - வீடியோ

    திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச். ராஜா கூறியதாவது:

    எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு... தொழிலாளர் சட்ட திருத்த மசோதா... லோக் சபாவில் தாக்கல்!!எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு... தொழிலாளர் சட்ட திருத்த மசோதா... லோக் சபாவில் தாக்கல்!!

    தற்போதுள்ள மத்திய அரசு விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேளாண் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்து வரும் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்காக என்ன செய்தார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

     2 Loksabha Seats in TN to face by Elections after 2G case, says H Raja

    இந்தியாவில் உள்ள விவசாயிகள், காங்கிரஸ் திமுகவில் உள்ள போலி விவசாயிகளின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு விவசாயத்தைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில் வேளாண் சட்ட மசோதா குறித்து அவர் எவ்வாறு கருத்து சொல்வார்?

     2 Loksabha Seats in TN to face by Elections after 2G case, says H Raja

    இன்னும் 70 நாட்களில் 2ஜி அலைக்கற்றை விசாரணை துவங்க உள்ளது. ஆகையால் தமிழகத்தில் இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. இவ்வாறு ஹெச். ராஜா கூறினார்.

    2ஜி அலைக்கற்றை விசாரணையில் திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டி ஹெச். ராஜா இவ்வாறு கூறினார்.

    English summary
    BJP National Secretary H Raja said that After 2G case hearing 2 Loksabha Seats in Tamilnadu will face By-Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X