திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மதியம் ஒரு கட்டிங்.. நைட் குவார்ட்டர்.. டீ காசும் உண்டு" ஓட்ரா ஓட்ரா.. கொஞ்ச நேரத்தில் எம கூட்டம்

திருப்பூர் பின்னலாடை நிறுவனம் நூதனமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Google Oneindia Tamil News

திருப்பூர்: "மதியானம் ஒரு கட்டிங் தர்றோம்.. நைட் ஒரு குவார்ட்டர் தர்றோம்.. டீ காசும் குடுக்கிறோம்.. கூடவே உங்களுக்கு சம்பளமும் உண்டு.. வேலைக்கு வர்றீங்களா" என்று ஒரு பின்னலாடை நிறுவனம் நோட்டீஸ் போர்டு வைத்து விளம்பரம் செய்து வருகிறது.

திருப்பூரை பொறுத்தவரை பெரும்பாலும் பின்னலாடை கம்பெனிகள்தான் அதிகம்... ஆனால் இங்கு வேலைக்கு சேர ஆட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.. அதனால் வேலைக்கு ஆள் கிடைக்காமல் பல ஓனர்கள் எல்லாம் புலம்ப ஆரம்பித்துள்ளனர். அப்படியே வேலைக்கு வந்தாலும், அதில் நீடிப்பதில்லை.. சம்பளம் நிறைய தர்றோம்னு சொன்னாலும் யாரும் சரியாக வருவதில்லையாம்.

a cutting in the afternoon a quarter in the night, special announcement

இந்த நிலையில் ஒரு பின்னலாடை கம்பெனியின் உரிமையாளர் ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் வேலைக்கு சேரும் ஒவ்வொருவருக்கும் சம்பளத்துடன் மதியம் ஒரு கட்டிங், இரவு ஒரு குவார்ட்டர் வழங்கப்படும் என்றும் அதுபோக டீக்காசு தரப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

என்னை இங்கெல்லாம் தொட்டாரும்மா.. வாரத்துக்கு ஒருமுறை.. கதறிய மகள்.. பதறிய தாய்.. தலைமறைவான தந்தை!என்னை இங்கெல்லாம் தொட்டாரும்மா.. வாரத்துக்கு ஒருமுறை.. கதறிய மகள்.. பதறிய தாய்.. தலைமறைவான தந்தை!

இதை ஒரு நோட்டீஸ் போர்டாகவே எழுதி தன் நிறுவனம் முன்பு வைத்துவிட்டார்.. இந்த விளம்பரத்தை வைத்து ஒரு சில மணி நேரங்கள்தான் ஆயிருக்கும்.. ஏகப்பட்ட நபர்கள் வேலைக்கு வந்து குவிந்து விட்டனர்.. அந்த கம்பெனிக்கு எவ்வளவு பேர் தேவையோ, அதற்கு அதிகமாகவே கொஞ்ச நேரத்தில் கிடைத்துவிட்டனர்.

இதை பார்த்து மற்ற கம்பெனிகள் ஆச்சரியத்தில் உள்ளன.. அவர்களும் இப்படியே ஏதாவது யோசிப்பார்களா, அல்லது வேறு மாதிரியான புதுசா அறிவிப்பு வருமா என தெரியவில்லை. ஆனால் இந்த கட்டிங் போஸ்டர் விளம்பரம்தான் சோஷியல் மீடியாவிலும் வைரலாக பரவி வருகிறது.

English summary
a cutting in the afternoon a quarter in the night, special announcement and this advertisement goes viral on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X