திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அஜித் ரசிகர்கள் தலையில் பாஜக வைத்த ஐஸ் கட்டி.. டார்கெட் ரஜினியா? இல்லை விஜய்யா??

அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது

Google Oneindia Tamil News

Recommended Video

    அஜித் ரசிகர்களுக்கு ஐஸ் வைக்கும் தமிழிசை... இலக்கு யார்?- வீடியோ

    திருப்பூர்: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் அக்கட்சியில் இணைந்திருக்கிறார்கள்.

    அரசியலே வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே தெளிவாக உணர்ந்து ஒதுங்கியே உள்ளவர் அஜித். ஆனால் மெர்சல் படம் வந்ததிலிருந்தே விஜய் மீது செம கடுப்பில் உள்ளது பாஜக.

    ஜிஎஸ்டி விவகாரம் முதல் அரசின் இலவச திட்டங்கள் வரை அனைத்தையும் விமர்சித்து நார் நாராக கிழித்து தொங்கவிட்ட படங்கள்தான் மெர்சல், மற்றும் சர்க்கார். இதனால்தானோ என்னவோ, அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

    பாஜக கட்சி

    பாஜக கட்சி

    பாஜக என்ற தேசிய கட்சியில் இதுநாள் வரை இணையாதவர்கள், இப்போது அஜித் ரசிகர்கள் என்ற பெயரிலேயே இணைந்திருக்கிறார்கள். இதற்காக ஒரு விழாவே நேற்று நடைபெற்றிருக்கிறது. திருப்பூரில் ஹரி அஜித் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் தமிழிசை சவுந்தர்ராஜன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

    தமிழிசை வரவேற்பு

    தமிழிசை வரவேற்பு

    புதிய தொண்டர்களை தமிழிசை வரவேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசும்போது சொன்னதாவது: "பாரத பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடையே நீங்கள்தான் கொண்டு செல்ல வேண்டும். மோடி தொண்டர்களாக நீங்கள் மாறி தமிழகத்தில் தாமரையை மலர செய்ய வேண்டும்.

    ஐஸ் கட்டி

    ஐஸ் கட்டி

    சினிமா கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித்தான். அவர் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாஜகவில் இணைந்துள்ளனர்" என்று அஜித் தலையில் ஒரு ஐஸ் கட்டி மூட்டையையே வைத்து, விஜய்யை இன்னும் சூடு ஏற்றி உள்ளார்.

    டென்ஷன்

    டென்ஷன்

    இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. பேட்ட, விஸ்வாசம் படம் ரிலீஸ் ஆனதில் இருந்தே அஜித் - ரஜினி ரசிகர்களிடைய மோதல் களை கட்டியது. அஜீத் படம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது தொடர்பாக ரஜின் ரசிகர்கள் டென்ஷனாக, பதிலுக்கு அஜீத் ரசிகர்களும் கச்சை கட்ட கலாட்டாவாகி விட்டது.

     யார் டார்கெட்?

    யார் டார்கெட்?

    இதனால் அஜித் ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதால் ரஜினி தரப்பு இன்னும் வெறுப்பாகும் என்று நினைத்து அவர்களை தன் கட்சிக்கு பாஜக இழுக்க முயல்கிறதா? அல்லது விஜய்யை மட்டும் டார்கெட் செய்து அஜித் ரசிகர்களை தன் பக்கம் இழுக்கிறதா என தெரியவில்லை.

    தேசிய கட்சி

    தேசிய கட்சி

    எப்படியோ, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற லாப கணக்கு போட்டு பாஜக இறங்கினாலும், யாருமே கூட்டணிக்கு வராத நிலையில், நடிகர்களின் ரசிகர்களை இழுக்கும் நிலைக்கு ஒரு தேசிய கட்சி நிலை ஆகிவிட்டதே என்றுதான் நினைக்க தோன்றுகிறது

    English summary
    Actor Ajith Fans joins BJP in Front of State President Tamizhisa Soundarajan at Tirupur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X