திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாகன ஓட்டிகளே... உடுமலை - மூணாறு ரோட்டில் யானைகள் நடமாடுது, கவனம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    உடுமலை - மூணாறு ரோட்டில் யானைகள் நடமாட்டம்-வீடியோ

    திருப்பூர்: காட்டுயானைகள் உடுமலை - மூணாறு சாலையில் சுற்றி வருவதால், வாகண ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது ஆனைமலை புலிகள் காப்பகத்திற்க்குட்பட்ட உடுமலை அமராவதி வனப்பகுதி. இங்கு யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    Be alert, A lot Of Elephants Crossing On Udumalai - Munnar road

    இந்த வனப்பகுதி இடையே அமைந்துள்ள உடுமலை - மூணாறு சாலையின் வழியே கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், வனபகுதியில் மழை பொழிவு குறைந்ததால் தண்ணிர் தேடி அருகிலுள்ள அமராவதி அனைக்கு யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றன.

    தண்ணீர் தேடி வரும் காட்டுயானைகள் சாலையை கடந்து செல்லாமல் சாலை ஓரங்களில் சுற்றிவருகின்றன. அவ்வப்போது சாலையின் குறுக்கேயும் நடந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு, காட்டுயானைகள் கடந்து சென்ற பின் செல்ல வேண்டியுள்ளது.

    எனவே, உடுமலை - மூணாறு சாலையில் காட்டுயானைகள் சுற்றி வருவதால் சுற்றுலாபயணிகள் பாதுகாப்பாக செல்லவும் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி இறங்கி செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Forest Officers advised to Tourists Elephants crossing often on Udumalai - Munnar road So take care
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X