திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அந்தரங்கம்".. தூங்கும்போது என் புருஷனை நினைச்சுக்கோ.. அத்துமீறிய கணக்கு டீச்சர்..குமுறும் பிஞ்சுகள்

கணக்கு டீச்சர், தன் வகுப்பு மாணவிகளுக்கு ஏகப்பட்ட தொல்லைகளை தந்துள்ளார்

Google Oneindia Tamil News

திருப்பூர்: நைட் நேரத்தில், தன்னிடம் படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு போனை போட்டு, தன் மகனிடம் பேச சொல்லி மிரட்டியுள்ளாராம் ஒரு டீச்சர்.. உங்களால் நம்ப முடிகிறதா?

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து, காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு கணக்கு டீச்சராக வேலை பார்த்து வருபவர் சாந்திப்பிரியா.

கணிதப்பாட முதுகலை பயின்றவர்.. இவ்வளவு பெரிய படிப்பை படித்துவிட்டு, எப்படி இவரால் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள முடிந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது.

அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க

 கெமிஸ்ட்ரி டீச்சர்

கெமிஸ்ட்ரி டீச்சர்

இவர் டீச்சராக வேலையில் சேர்ந்தபோதிருந்தே ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளன.. ஒரு மாணவியிடம் தீண்டாமை உணர்வுடன் நடந்து கொண்டாராம்.. கெமிஸ்ட்ரி லேப்-பில் அமிலக் குடுவைகளின் பக்கத்தில், மாணவியை தனியாக உட்கார வைப்பாராம்.. கிளாஸில் பாடம் நடத்தாமல், தன் வீட்டு விஷயங்களை பேசிக் கொண்டிருப்பாராம்.. இதைவிட முக்கியம், தன் வகுப்பு மாணவி ஒருவரை, "மருமகளே" என்றுதான் கூப்பிடுவாராம்.. இந்த மாணவியை தன்னுடைய மகனிடம் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.

 நைட் நேரம்

நைட் நேரம்

நைட் நேரம் ஆகிவிட்டால், மாணவிகளுக்கு இந்த டீச்சர் போன் போட்டு பேசுவாராம்.. பாட விஷயமாக பேச வேண்டும் என்று சொல்லி பேச்சை ஆரம்பிப்பாராம்.. ஆனால், பாடம் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல், தன்னுடைய மகனை பற்றி அந்த பெண்களிடம் பேசி வந்துள்ளார்.. தன் மகனிடமும் அந்த பெண்கள் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.. இதனால், டீச்சர் போனை, மாணவிகள் இரவு நேரத்தில் எடுத்து பேசுவதை தவிர்த்துள்ளனர்.. ஆனால், மறுநாளே கிளாஸில் வந்து அந்த பெண்களை மிரட்டுவாராம்..

"பழிக்குப் பழி"

அதேபோல, அனைத்து மாணவிகளின் போன் நம்பரையும், தன் மகனுக்கு தந்து பேச வைத்துள்ளார்.. அப்படி எந்த பெண்ணாவது, மகனின் அழைப்பை ஏற்க மறுத்தால், அந்த மாணவிகளை தேர்வு மதிப்பெண்களின் "கை" வைப்பேன் என்று மிரட்டியுள்ளார்... இதனால் மாணவிகள் கதறி அழுது வந்துள்ளனர்.. இதைதவிர, பள்ளியில் மற்ற ஆசிரியர்களுடனும் எப்ப பார்த்தாலும் சண்டையிட்டு வந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, கிளாஸ்ரூமில், "பழிக்குப் பழி" என்று கரும்பலகையில் எழுதி மாணவர்களின் மனதில் பழி உணர்வை விதைக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளார்..

ப்ளீஸ்

ப்ளீஸ்

பாடம் நடத்தாமலேயே சும்மாவே கிளாஸில் உட்கார்ந்திருப்பாராம்.. "பாடம் நடத்துங்கள்" என்று மாணவிகள் கேட்டால், தன்னுடைய காலில் விழுந்து ப்ளீஸ் என்று கெஞ்சினால் தான் பாடம் நடத்துவேன் என்று சொல்வாராம்.. இதைவிட இன்னொரு கொடுமை உள்ளது.. இந்த மாணவிகள் தினமும் நைட்டில் தூங்கும்போதும், இந்த டீச்சரின் கணவரையே மனதில் நினைத்துக்கொண்டு தான் தூங்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார்..

 டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

அந்த டீச்சர் மீது, இவ்வளவு புகார்களையும், ஒட்டுமொத்த மாணவிகளும் தந்துள்ளனர்.. விஷயம் அதிகாரிகள் வரை போய்விட்டது. வட்டார கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி, நேரடியாகவே விசாரணை மேற்கொண்டார்... நடந்தது எல்லாமே உண்மை என்று தெரிய வந்ததையடுத்து, சாந்திப்பிரியா டீச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக, பூலாங்கிணறு அரசுப்பள்ளிக்கு டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார்...

 புத்தி மாற்றம்

புத்தி மாற்றம்

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே இப்படி இருந்தால், பிள்ளைகளை யார் திருத்துவது? எவ்வளவு பெரிய தவறுகளை செய்தாலும், இதுபோன்றவர்களுக்கு பணி மாற்றம் மட்டும்தான் உச்சபட்ச தண்டனையா? தன்னிடம் படிக்கும் பிள்ளைகள் எல்லாருமே 18 வயதுக்கு குறைவான மாணவிகள் என்று தெரிந்தும், இப்படிப்பட்ட காரியங்களை செய்தால், போக்சோ சட்டத்தின் உள்ளே போக வேண்டி வரும் என்பது ஒரு அரசு பள்ளி ஆசிரியைக்கு தெரியாதா? அதைவிடுங்க.. "பணி மாற்றம்" செய்தால் மட்டும் "புத்தி மாற்றம்" உடனே வந்துவிடப்போகிறதா என்ன??? டீச்சர் வேலைக்கே இதுபோன்ற நபர்கள் லாயக்கானவர்கள் இல்லை என்று சொல்லி, அவரது பணியையே அதிரடியாக பறிக்கப்பட வேண்டும்..!!!!

டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

இந்த பணி மாறுதல் பல்வேறு கேள்விகளை பெற்றோர்கள் மத்தியில் எழுப்பி வருகிறது.. பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் இந்த ஆசிரியை ஈடுபட்டுள்ளார் என்பது, அவரது மாணவிகளின் மூலமே உறுதியாகி உள்ள நிலையில், ஏன் போக்சோவில் இவர் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள்.. எதிர்காலம் நலன் கருதியோ அல்லது பயத்தினாலோ, மாணவிகள் பகிரங்கமாக புகார் தராத பட்சத்தில், மாவட்ட கல்வி நிர்வாகம், அல்லது குழந்தைகள் நல ஆணையம் தானாகவே முன்வந்து புகார் கொடுக்க முடியும்.. அப்படி கொடுத்தால், போக்சோவிலும் வழக்கு பதிவாகும்.. யாருமே புகார் அளிக்கப்படாத காரணத்தினால்தான், இப்போது 30 கிமீ தூரத்தில் உள்ள அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.. நேரடியாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியது உண்மை என்றால், மாணவிகள் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மை என்றால், ஏன் கல்வி நிர்வாகம் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் கேட்கிறார்கள்.

English summary
Big Shame: government school teacher disturbed girl students and what happened near Tiruppur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X