திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வயலுக்குள் வந்துடாதே" .. கையெடுத்து கும்பிட்ட போதை ஆசாமி.. பொறுமை காத்து நகர்ந்த சின்னத்தம்பி!

Google Oneindia Tamil News

Recommended Video

    போதை ஆசாமியை துரத்திய சின்னத்தம்பி-வீடியோ

    திருப்பூர்: உடுமலை அருகே செங்கழனிபுதூர் கரும்புத் தோட்டம் மற்றும் நெல்வயல்களில் வலம் வந்த சின்னத்தம்பியை வழிமறித்து மதுபோதையில் ஒருவர் கையெடுத்து கும்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

    கோவை தடாகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்து வந்த விநாயகன் மற்றும் சின்னத்தம்பி என பெயரிடப்பட்ட இரண்டு காட்டு யானைகளை வனத்துறையினர் பிடித்து முதுமலை மற்றும் வரகழியாறு வனப்பகுதிகளில் விட்டுள்ளனர்.

    சின்னத்தம்பி முகாம்

    சின்னத்தம்பி முகாம்

    இதில் சின்னத்தம்பி யானை கடந்த சில நாட்களாக உடுமலை பகுதியில் சுற்றி வந்தது. அதன் கூடாரம் காலி செய்யப்பட்டவுடன், திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமிநாதபுரம் பகுதிக்கு நேற்று மாலை வந்தது. இந்த நிலையில் இன்று காலை திருப்பூர் மாவட்டம் கண்ணாடிபுதூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னத்தம்பி முகாமிட்டிருந்தது.

    யானை

    யானை

    அப்போது அங்கு குடிபோதையில் ஜோதிமணி என்பவர் வந்தார். அவர் சின்னத்தம்பியிடம் கையெடுத்து கும்பிட்டு தனது நெல் வயலுக்குள் வந்து விட வேண்டாமென கேட்டுக் கொண்டார். அப்போது வனத்துறையினரும் காவல் துறையினரும் குடிபோதையில் யானையிடம் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.

    சின்னத்தம்பி

    சின்னத்தம்பி

    எனினும் அவர்கள் பேச்சை மீறி சின்னத்தம்பி முன் நின்ற ஜோதிமணி அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. அப்போது சின்னத்தம்பி என்ன நினைத்தானோ தெரியவில்லை. ஜோதிமணி நோக்கி நகரத் தொடங்கினான்.

    கோபம் கொண்ட சின்னத்தம்பி

    கோபம் கொண்ட சின்னத்தம்பி

    இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் மற்றும் போலீஸார் வேகமாக சென்று ஜோதிமணியை இழுத்து சென்று அப்புறப்படுத்தினர். சின்னத்தம்பி நல்லத்தம்பி என பெயர் வாங்கி யாரையும் தாக்காத நிலையில் மதுபோதையில் இதுபோன்ற சில்மிஷங்களில் யாரேனும் ஈடுபட்டால் யானைகளுக்கு கோபம் வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    English summary
    Chinnathambi: It gets angry over a man who was in drunker near Sugarcane field.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X