திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுவரை டூர் போனதே இல்லை.. முதல் முறையாக இலங்கை சென்ற திமுக மா.செ.. குண்டுவெடிப்பால் திரும்பிய சோகம்

இலங்கை குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக நிர்வாகி

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை குண்டுவெடிப்பில் புது திருப்பம்: ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு- வீடியோ

    சென்னை: "இதுவரைக்கும் நான் டூர் எல்லாம் போனதே இல்லை.. அதனால இலங்கைக்கு போகலாம்" என்று ஆசை ஆசையாக சென்ற திமுக பிரமுகர் ஒருவர் குண்டுவெடிப்பில் இருந்து உயிர்தப்பி வந்திருக்கிறார்!

    திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ். இவர்தான் இந்த குண்டுவெடிப்பில் இருந்து தப்பியவர். சில தினங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. அதனால் அனல் பறக்கும் தீவிர பிரச்சாரத்தில் நிர்வாகிகளுடன் செல்வராஜ் செயல்பட்டார்.

    தேர்தலும் முடிந்த நிலையில், எங்காவது டூர் போகலாம் என்று ஆசைப்பட்டார் செல்வராஜ். நண்பர்கள், கட்சி நிர்வாகிகளிடம் "இதுவரைக்கும் நான் டூர் போனதே இல்லை.. அதுவும் வெளிநாடு எல்லாம் போனதே கிடையாது. இந்த முறை எங்காவது போகலாம்" என்று சொல்லி இருக்கிறார். அதன்படியே இலங்கை போவதென முடிவெடுத்து கடந்த 20-ம் தேதி 6 பேர் புறப்பட்டிருக்கிறார்கள்.

    2 நாட்கள் அமைதிக்கு பிறகு இலங்கையில் மீண்டும் இன்று குண்டு சத்தம்! தியேட்டர் அருகே பரபரப்பு2 நாட்கள் அமைதிக்கு பிறகு இலங்கையில் மீண்டும் இன்று குண்டு சத்தம்! தியேட்டர் அருகே பரபரப்பு

    குண்டுவெடிப்பு

    குண்டுவெடிப்பு

    இலங்கையில் கிங்ஸ்பரி என்ற ஸ்டார் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர். ஈஸ்டர் அன்றைக்கு காலையில் குளித்து முடித்து டிபன் சாப்பிடுவதற்காக மேலே ரூமிலிருந்து கீழே வருவதற்காக முயன்றனர். அந்த நேரத்தில்தான் அதாவது 8.45 மணிக்கு பயங்கர குண்டு வெடிப்பு சத்தம் கேட்டிருக்கிறது.

     கட்டிடங்கள் குலுங்கின

    கட்டிடங்கள் குலுங்கின

    அதாவது ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதில் இந்த ஓட்டலும் ஒன்று! இதனால் ஹோட்டல் கட்டிடமே அதிர்ந்ததாம்.. ஒருநிமிடம் என்ன நடக்கிறது என்றே யூகிக்க முடியவில்லை என்று செல்வராஜ் சொல்கிறார். தொடர்ந்து இதை பற்றி செல்வராஜ் சொல்லும்போது:

    சுனாமியா?

    சுனாமியா?

    "ஹோட்டலில் உள்ள நீச்சல் குளம் தண்ணீர் மேலே எழும்பி ஊற்றியதால் சுனாமிதான் வந்துவிட்டது என்றுகூட நினைத்தோம். கீழ்த்தளத்தில் மக்கள் அலறியடித்து நாலா புறமும் சிதறி ஓடினார்கள். எங்கே போறதுன்னே தெரியாமலும், அடுத்து என்ன நடக்கும்னும் தெரியாமல் 6 பேரும் பயத்திலேயே உறைந்து போய் இருந்தோம்.

    வைரமுத்து

    வைரமுத்து

    பயந்து நடுங்கி இருந்தபோது ஓட்டல் ஊழியர்கள்தான் எங்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து சென்றார்கள். கவிஞர் வைரமுத்து போன் பண்ணி நிலைமையை விசாரித்தார். வேறு ஒருஇடத்தில் எங்களை தங்க வைத்தார்கள். எனக்கு ஜூரமே வந்துவிட்டது.

    உசுரே வந்தது

    உசுரே வந்தது

    அங்கேயே ஒரு ஆஸ்பத்திரியில் அழைத்து சென்றார்கள். அங்க ஆஸ்பத்திரியிலதான் குண்டு வெடிப்பு பத்தி நர்ஸ்கள் பேசிக்கிட்டாங்க. நேத்து மதியம் கோயமுத்தூர் மண்ணை மிதித்த பிறகுதான் உசுரே வந்தது" என்று செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tirupur DMK Personality KS Selvaraj great Escape in Srilankan Bomb blast
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X