திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரக்கு உள்ள போறதுக்கு முன்னாடியே கன்பியூஷன்.. திருப்பூரில் மதுக்கடையை மொய்த்த குடிமகன்கள்- வீடியோ

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் பார்கள் இன்று முதல் 31 தேதிவரை மூடப்படும் என்றதால் மது பிரியர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு கடைக்குள் புகுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Recommended Video

    ஐயையோ கடைய மூடிருவாங்களே.. திருப்பூரில் மதுக்கடையை மொய்த்த குடிமகன்கள்- வீடியோ

    சீனாவில் 3,213 பேரை காவு வாங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.

    இந்தியாவில் 125 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தென்னிந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவியுள்ளது.

     கொரோனா கோரத் தாண்டவம்.. மகாராஷ்டிராவில் ஒருவர் சாவு.. இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு கொரோனா கோரத் தாண்டவம்.. மகாராஷ்டிராவில் ஒருவர் சாவு.. இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு

    மதுக் கூடங்கள்

    மதுக் கூடங்கள்

    கேரளாவில் அதிகளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் எல்லையோரப் பகுதிகளில் பலத்த சோதனைக்கு பிறகுதான் தமிழக எல்லையினுள் பொது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை (மார்ச் 17) முதல் தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கூடங்கள் (பார்கள்) மூடப்படும் என அரசு நேற்று அறிவித்தது.

    மதுவை கூடுதலாக

    மதுவை கூடுதலாக

    அதை தொடர்ந்து தகவலை முழுமையாக கவனிக்காத சில குடிமகன்கள் நாளை முதல், அதாவது இன்று முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடி விடுவார்கள் என நினைத்து திருப்பூரில் பல்வேறு கடைகளில் திடீர் என மதுபிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மதுவை கூடுதலாக வாங்கி சென்றனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குடிமகன்கள் ஒரு நபருக்கு ஒன்று அல்லது இரண்டு கொடுங்கள். நாங்கள் நீண்ட நேரமாக காத்து கிடக்கிறோம் என கூச்சலிட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். எனினும் சிலர் நிறைய பாட்டில்களை வாங்கியதால் எங்கே சரக்கு தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக பொறுமையை இழந்து ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு கடைக்குள் புகுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    மதுபிரியர்கள்

    மதுபிரியர்கள்

    இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இவர்கள் கை நிறைய பாட்டில்களை வாங்குவதை பார்த்தால் பணக்காரன் படத்தில் நடிகர் செந்தாமரை பாட்டில்களை கழுத்தில் மாலையாக போட்டு வரும் காட்சிதான் இதில் இல்லை. அந்த அளவுக்கு மது பிரியர்கள் போட்டா போட்டி போட்டனர்.

    English summary
    Drunkards gathered together in Thiruppur Tasmac by understanding govt announcement wrong as they think of closure of Tasmac instead of bars.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X