திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆனைமலையாறு நல்லாறு திட்டத்துக்காக கேரளாவிடம் பேச்சு... விரைவில் பணி தொடங்கும்... முதல்வர் உறுதி!

Google Oneindia Tamil News

திருப்பூர்: ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை செயல்படுத்த கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது., கூடிய விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Recommended Video

    ஆனைமலையாறு நல்லாறு திட்டம்.. விரைவில் பணி தொடங்கும்.. முதல்வர் உறுதி! - வீடியோ

    தென்னை விவசாயகள் பயன் பெற நீரா பானத்திற்கு இந்த அரசு தான் அனுமதி வழங்கியது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    பி.ஏ.பி பாசனத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தடையின்றி நீர் கிடைக்க காண்டூர் கால்வாய் சீரமைக்க 72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    களைகட்டும் தேர்தல்

    களைகட்டும் தேர்தல்

    தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை முடிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் தேர்தல் பிரசாரமும் நடந்து வருகிறது. திமுக சார்பில் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீரா பானத்துக்கு அரசு அனுமதி

    நீரா பானத்துக்கு அரசு அனுமதி

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் விவசாயிகள் உடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:- வேளாண் பணி என்பது கடினமான பணி.அதில் ஈடுபட்டுள்ள விவசாயகள் பயன்பெற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்னை விவசாயகள் பயன் பெற நீரா பானத்திற்கு இந்த அரசு தான் அனுமதி வழங்கியது.

    கேரள அரசிடம் பேச்சுவார்த்தை

    கேரள அரசிடம் பேச்சுவார்த்தை

    கொப்பரை தேங்காய் விலை உயர்வுக்கு பிரதமரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், விவசாயிகள் பயன் பெரும் விதமாக கால்வாய்கள் சீரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை செயல்படுத்த கேரள அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது., கூடிய விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டும்.

    விவசாயிகளுக்கு ரூ.72 கோடி ஒதுக்கீடு

    விவசாயிகளுக்கு ரூ.72 கோடி ஒதுக்கீடு

    பி.ஏ.பி பாசனத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தடையின்றி நீர் கிடைக்க காண்டூர் கால்வாய் சீரமைக்க 72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார். இதையடுத்து விவசாய சங்கங்கள் சார்பில் முதலமைச்சரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை எடுப்ப்பதாக உறுதி அளித்தார்.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy said that the government of Kerala is in talks to implement the Anaimalayaru Nallaru project and work will be carried out as soon as possible
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X