திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க கூடாது... அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

Google Oneindia Tamil News

திருப்பூர்: விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வழியாக மின்சாரம் கொண்டு வர விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் அருகே உள்ள கள்ளிபாளையம் பகுதியில் 12-வது நாளாக விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அரசுக்கு கோரிக்கை

அரசுக்கு கோரிக்கை

அப்போது, விளைநிலங்களில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 12-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டமும், 6-வது நாளாக உண்ணாவிரத போராட்டமும் நடந்து வருகிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.

அரசு பிடிவாதம்

அரசு பிடிவாதம்

மேலும், விளை நிலங்கள் பாதிக்க கூடாது என்பதே தவிர மின்சாரத்தை எடுத்து செல்ல வேண்டாம் என்பது அல்ல. பவர் கிரிட் நிறுவன பணிக்கு மின் கோபுரம் அமைக்க டெண்டர் எடுத்தவர்கள் ஆளும் கட்சி சேர்த்தவர்கள் என்றும், காண்ட்ராக்டர்கள் லாபத்திற்காக அரசு பிடிவாதமாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

போராட்டம் விரிவடையும்

போராட்டம் விரிவடையும்

உண்ணாவிரதம் இருப்பவர்களை யாரும் பார்க்க கூடாது. காவல்துறையினரை வைத்து அரசு தடுப்பது
உலகத்திலேயே எந்த நாட்டிலேயும் சட்டம் கிடையாது. இது போன்ற மூர்க்கதனமான அடக்கு முறை. இந்த போராட்டத்தை அடக்க எடுக்கிற ஒவ்வொரு நடவடிக்கையும் போராட்டத்தை மேலும் விரிவடைய செய்யும்.

மாநிலம் தழுவிய போராட்டம்

மாநிலம் தழுவிய போராட்டம்


மேற்கு மாவட்ட அளவில் நடைபெறும் போராட்டம் தமிழகம் தழுவிய போராட்டமாக நடைபெற
அனைத்து கட்சிகளும் சேர்ந்து பேசி ஓரு பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த வேண்டும்.
அரசு அடக்கு முறையை கைவிட்டு விட்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், வருகிற ஜனவரி 2-ந் தேதி தொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடர் அமைதியாக நடக்க வேண்டுமா? என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தீர்மானித்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

English summary
The CPI (M) Secretary Balakrishnan asked That the Farmers' reasonable demands Must be Fullfiled by government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X