திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்ல சுப்பராயன்.. பிறகு செல்வம்.. அடுத்து ஜெகநாதன்.. கூடவே அய்யனார்.. பள்ளிவாசலே கலங்கி போச்சுபா

திருப்பூர் பள்ளிவாசல் அருகே 4 கட்சிகள் ஒரே நேரத்தில் பிரச்சாரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சுப்பராயன், செல்வம், ஜெகநாதன், அய்யனார்: பள்ளிவாசலே கலங்கியது

    திருப்பூர்: ரெண்டு கட்சிகளின் தகராறு என்றாலே கண்ணை கட்டும்.. நாலு கட்சிகளும் ஒன்றாக சேர்ந்தால்?? கேட்கணுமா என்ன? போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே பரபரப்பாகி விட்டது.

    திருப்பூர் பெரிய கடை வீதியில் ஒரு பள்ளி வாசல் அமைந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகைக்கு வந்திருந்தார்கள்.

    Four Parties Election Campaign in Tiruppur at the same time

    அமைச்சருக்கு ஒரு நியாயம், கதிர்காமுக்கு ஒரு நியாயமா? குமுறும் அமமுக நிர்வாகிகள்அமைச்சருக்கு ஒரு நியாயம், கதிர்காமுக்கு ஒரு நியாயமா? குமுறும் அமமுக நிர்வாகிகள்

    உள்ளே தொழுகை முடிந்து வெளியே வருபவர்களிடம் வாக்கு சேகரிக்கலாம் என்று கூட்டணி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து திமுகவினர் அங்கு வந்து நின்றனர்.

    பிறகு அமுமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வம் ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். அவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகநாதன் தன் ஆதரவாளர்களுடனும், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் அய்யானர் தன் ஆதரவாளர்களுடனும் அங்கு நின்றிருந்தார்கள்.

    நான்கு கட்சிக்காரர்களும் பள்ளி வாசலில் இருந்து எப்போது மக்கள் வெளியே வருவார்கள், ஓட்டு கேட்கலாம் என காத்திருந்தனர். அதன்படி வெளியே வந்தவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் நான்கு கட்சிக்காரர்களுமே ஓடி ஓடி தந்தனர். ஒரு கட்டத்தில் நான்கு கட்சியை சேர்ந்தவர்களும் கோஷமிட துவங்கினர். அதுவரை அமைதியாக இருந்த அந்த பகுதி திடீரென மீன் மார்க்கெட் போல ஒரே சத்தமாகி விட்டது.

    போட்டி போட்டுக் கொண்டு கோஷம் இட்டதால், மக்கள் அவர்களை பார்த்து கொண்டே சென்றனர். இதையெல்லாம் கவனித்த ஒரு பெரியவர், இவர்களிடம் வந்து, "இப்படி பள்ளி வாசல் முன்னாடி நின்னு கூச்சல் போடாதீங்க.. நோட்டீஸ் தர்றதா இருந்தா அமைதியா தந்துட்டு இடத்தை காலி பண்ணுங்க" என்று சத்தம் போட்டார். இதற்கு பிறகுதான் அனைவருமே கப்சிப் ஆனார்கள்!

    English summary
    In Tiruppur, Four Parties including DMK and Naam Tamizhar parties campaign in front of the Mosque
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X