திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பா.ரஞ்சித் படங்களை யாரும் பார்க்காதீங்கங்கறேன்.. எச். ராஜா பொளேர் பேச்சு!

இயக்குனர் பா.ரஞ்சித் படங்களை பார்க்காங்க.. எச்.ராஜா பேட்டி அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    H.Raja slams Pa. Ranjith | பா.ரஞ்சித் பேசுவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது: எச். ராஜா - வீடியோ

    திருப்பூர்: "பா. ரஞ்சித் படங்களை யாரும் பார்க்காதீங்க.. இதுதான் அவருக்கு சரியான பாடம்" என்று எச். ராஜா கூறியுள்ளார்.

    திருப்பூரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    கர்நாடக அரசியலில் எம்எல்ஏக்களின் தகுதி நீக்கத்தால் தற்போதைய அரசின் ஸ்திரத்தன்மை எந்த நிலையிலும் பாதிக்க போவதில்லை. எடியூரப்பா ஆட்சி அமைக்க நம்பிக்கை வாக்கெடுப்பில் கிடைக்கும் பெரும்பான்மையே போதுமானதாக இருக்கும்.

    H Raja says about Director Pa Ranjith

    புதிய கல்விக்கொள்கை குறித்து பலர் உள் நோக்கத்துடனேயே பேசி வருகிறார்கள். மலைவாழ் மக்கள், கிராம பகுதிகளில் இருப்பவர்களும் பயன்பெறும் வகையில்தான் இந்த புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இன்னும் சொல்ல போனால், இந்த கல்வி கொள்கையில் முழுக்க முழுக்க கிராம மக்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதை போய் எதிர்க்கிறாங்களே.. அப்படி இதை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், மலைவாழ் மக்கள், கிராம புறத்தை சேர்ந்தவர்கள் கல்வி அறிவு பெறுவதை எதிர்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம் ஆகிறது. நல்லது எதை பண்ணாலும், தமிழ்நாட்டில் இருக்கிற ஒரு சில அரசியல்வாதிகள் எதிர்க்க தான் செய்யறாங்க.

    இத்தனை செய்தும்.. எங்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை.. ஓபிஎஸ் உருக்கம் இத்தனை செய்தும்.. எங்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை.. ஓபிஎஸ் உருக்கம்

    அதேமாதிரி, ராஜராஜ சோழன் குறித்து டைரக்டர் பா.ரஞ்சித் பேசுவதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடையாது. இவருக்கு நோக்கம்.. எப்படியாவது தமிழகத்தில் சாதிய மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான், அதுக்காகத்தான் இப்படியெல்லாம் பேசி வருகிறார்.

    மதம் மாற்றும் ஒருசில தீயசக்திகளின் கையாளாக ரஞ்சித் செயல்படுகிறாரோ என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இது உள்நோக்கம் கொண்ட பொய். அதனால், ரஞ்சித் இயக்கும் படங்களை பொதுமக்கள் பார்க்கவே வேணாம்... அவரது படங்களை புறக்கணித்து அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.

    English summary
    BJP National Secretary H Raja has said that nobody should watch the films directed by Pa Ranjith
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X