திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி. திரும்பிய பக்கமெல்லாம் போலீஸ் குவிப்பு..!

Google Oneindia Tamil News

திருப்பூர்: பிரதமர் மோடி வருகையை ஒட்டி திருப்பூரில் உச்சக் கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் இன்று நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.35 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகிறார்.

Highest Security Arrangements For Prime Minister Narendra Modi in Tirupur

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் செல்லும் மோடி, அங்கிருந்து கார் மூலம் 3.15 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு சென்று அரசு விழாவில் பங்கேற்கிறார். அப்போது மெட்ரோ ரெயில் திட்டம் உள்ளிட்ட சில அரசு திட்டங்களை துவக்கி வைக்கிறார். அதைத்தொடர்நது, அதே பகுதியில் பாஜக சார்பபில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான , பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

மேலும், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், திருப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பபட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 2500 தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பாரதீய ஜனதா கட்சியினர் திருப்பூர் முழுவதும் பிரம்மாண்ட விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர். விழா நடைபெறும் இடங்களை சுறறி அலங்கார வளைவுகளும் அமைத்துள்ளார்கள்.

English summary
Over 2,500 police personnel provided tight security during Prime Minister Narendra Modi's visit to Tirupur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X