திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் மாத்திரை.. ஒரு நாளைக்கு 4 வாட்டி சாப்பிட்டா கொரோனா வராது.. திருப்பூர் டாக்டர் சொல்கிறார்

Google Oneindia Tamil News

திருப்பூர்: பரவிவரும் கொரோனா வைரஸுக்கு ஹோமியோபதியில் தடுப்புமருந்து இருப்பதாகவும் , ஹோமியோபதி , சித்தா மருத்துவர்களையும் கொரோனா மருந்து கண்டறிவது குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும் என ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Recommended Video

    கொரோனாவுக்கு மருந்து சொன்ன திருப்பூர் மருத்துவர் | Tirupur Doctor says he found cure for Corona

    உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். இதற்கு சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Homeopathy treatment for Coronavirus, says Tamilnadu doctor

    இந்த நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் கிங் என்பவர் ஹோமியோபதி மருத்துவத்தில் கொரோனா தடுப்பு மருந்து இருப்பதாகவும் , இதனை சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும், இதில் எந்த பக்க விளைவும் கிடையாது. மாற்று மருத்துவத்தை அரசு கருத்தில் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    1 நாளைக்கு 4 மாத்திரை எடுத்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துவிடும் என்றும் அவர் கூறினார். மாத்திரையை காண்பித்தார். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வராமல் தடுக்கும் என்கிறார் அவர்.

    இது போன்ற நேரங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேத மருத்துவர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும் எனக்கோரி சுகாதார துறையிடம் இதுகுறித்து வலியுறுத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

    இதை முதல்வர் அல்லது, சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது, அவரது கோரிக்கையாக இருந்தது. உலகம் முழுக்க ஆய்வுகள் நடந்து வந்தாலும், இதுவரை, கொரோனா வைரசை குணப்படுத்தக் கூடிய மருந்து என்று எதுவும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Homeopathy treatment for Coronavirus, says a doctor, and want government to hear his opinion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X