திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதிமுகவில் இருந்து மொத்தமாக விலகுகிறேன்..திருப்பூர் துரைசாமி அறிவிப்பு

Google Oneindia Tamil News

திருப்பூர்: மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார். திமுக உடன் மதிமுகவை இணைக்க வேண்டும் என்று கடந்த மாதம் வைகோவிற்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய திருப்பூர் துரைசாமி இன்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மொத்தமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

வைகோவுக்கு கடிதம் எழுதிய அவர், மதிமுக தொடங்கியபோது வாரிசு அரசியலுக்கு எதிரான வைகோவின் உணர்ச்சி பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தார்கள். ஆனால் அண்மை காலமாக அவரின் குழப்பமான செயல்பாடுகள் காரணத்தினால் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டார்கள் . கட்சியில் மகனை அரவணைப்பதும் தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது.

I am resigning from MDMK Says Tirupur Duraisamy

வைகோ இதை உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மதிமுக தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க அவரின் பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும் என்றால், மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது என்று தெரிவித்திருந்தார்.

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் முடிவை மறுத்த வைகோ, திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை அலட்சியப்படுத்துவதாக கூறினார். மதிமுக தொண்டர்கள் எண்ணம் அதுவல்ல என்பதை தெளிவுபடுத்தினார்.

இதைத் தொடர்ந்து திருப்பூர் துரைசாமியை கட்சியிலிருந்து நீக்க வலியுறுத்தி வைகோவை கட்சியினர் வலியுறுத்த தொடங்கினர். மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மணி வைகோவுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். இதனால் திருப்பூர் துரைசாமியை மதிமுகவிலிருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

திமுக- மதிமுக இணைப்பா? மூத்த நிர்வாகி துரைசாமி மீது நடவடிக்கை இல்லை.. துரை வைகோ பதில் திமுக- மதிமுக இணைப்பா? மூத்த நிர்வாகி துரைசாமி மீது நடவடிக்கை இல்லை.. துரை வைகோ பதில்

இந்நிலையில் கடந்த மாதம் திருப்பூர் துரைசாமி செய்தியாளர்களை சந்தித்து பொது வாழ்க்கையில் இருந்து தான் வழங்குவதாக அறிவித்தார். தனது வீட்டில் போட்டி பொதுக்குழு எதுவும் நடத்தவில்லை என்றும் திமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளிலும் தான் சேரப் போவதில்லை என்றும் கூறியுள்ள அவர் பொது வாழ்வில் இருந்து விலகி இருக்க போவதாக அறிவித்தார். மதிமுகவில் நீடிப்பதாகவே கூறி வந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் துரைசாமி, மதிமுகவின் அடிப்படை உறுப்பினர், அவைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

English summary
Thirupur Duraisamy has announced that he will step down from all responsibilities including basic membership of the MDMK. Tirupur Duraisamy, who created a stir last month by writing a letter to the Vaiko requesting the merger of the DMK and the MDMK, has today announced that he will completely withdraw from all the responsibilities of the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X