திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருப்பூரில் திடீர் பரபரப்பு.. சீருடையில் போராட்டத்தில் குதித்த அரசு கண்டக்டர்

திருப்பூரில் அரசு பஸ் கண்டக்டர் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சீருடையில் போராட்டத்தில் குதித்த அரசு கண்டக்டர்-வீடியோ

    திருப்பூர்: யூனிபார்ம் போட்டுக்கிட்டு தன்னந்தனி ஆளாக உட்கார்ந்திருந்த அந்த நபரைதான் ரோட்டில் போவோர் வருவோர் என எல்லோருமே பார்த்து செல்கிறார்கள்.

    பழனியில் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தவர் ரமேஷ் குமார். இவர் 3 மாசத்துக்கு முன்னாடி திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு மாற்றப்பட்டார்.

    இதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் இவர் லீவு கேட்டால் போக்குவரத்து அதிகாரிகள் தருவதே இல்லையாம்.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    "தனியாக லீவு தராவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் என்னுடைய வார லீவில் கூட வந்து டியூட்டி பார்க்க சொல்கிறார்கள்" என்று சொல்கிறார் ரமேஷ்குமார். தனக்கு வேண்டியவங்களுக்கு மத்தவங்களுக்கு மட்டும் லீவு தரும் அதிகாரிகள், தான் கேட்டால் மட்டும் தருவதில்லை என்றும் இவர் குற்றஞ்சாட்டுகிறார்.

    போராட்டம்

    போராட்டம்

    அதனால் இப்படி ஒரே இடத்தில் பாகுபாடு காட்டும் அதிகாரிகளை கண்டித்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் ரமேஷ்குமார் நேற்று போராட்டத்தில் குதித்து விட்டார். திருப்பூர் 2-வது டிப்போ முன்பு கையில் ஒரு கோரிக்கை பதாகையையும் வைத்து கொண்டு உண்ணாவிரதத்தில் உட்கார்ந்து விட்டார்.

     சமாதான பேச்சுவார்த்தை

    சமாதான பேச்சுவார்த்தை

    நேற்று இரவு வரை போராட்டம் நடத்தினார். ஆனால் தகவலறிந்து வந்த திருப்பூர் போலீசார் ரமேஷ்குமாரை சமாதானப்படுத்தினார்கள். அதன்பின்னர்தான் உண்ணாவிரதத்தை கைவிட்டார் கண்டக்டர். இருந்தாலும் அரசு பஸ் டெப்போ முன்பு கண்டக்டர் இப்படி திடீரென உண்ணாவிரதத்தில் உட்கார ஆரம்பித்துவிட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பாகி விட்டது.

    பெரிய மாற்றம்

    பெரிய மாற்றம்

    பொதுவாக, இவ்வளவு காலம் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் மூலமாகவே எதிர்ப்புகளை, கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த நிலையில், தனி நபராகவும் போராட துவங்கி விட்டது பெரிய மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.

    English summary
    Govt. Bus Conductor Ramesh Kumar Strike against authorities In Thirupur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X