திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தனியா இருக்கேன்.. வர்றீங்களா"ன்னு கேட்டேன்.. கேக்கல.. அப்பறம்தான்.. பகீரை கிளப்பிய அல்போன்ஸ் மேரி!

பல்லடம் அருகே குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆசை வார்த்தை கூறி குழந்தையை கடத்திய பெண் - வீடியோ

    திருப்பூர்: "நான் தனியாதான் இருக்கேன்.. என்கூட வந்து இருந்துடுங்க என்று மாரியிடம் சொன்னேன்.. ஆனால், நாங்கள் குழந்தையுடன் இருக்கோம்.. நீ வந்து எங்களுடன் தங்கிக்கோ என்று மாரி சொன்னார்.. அதன்படியே வீட்டுக்கு போனேன்.. பொழுது விடிந்ததும் குழந்தையை கடத்திட்டு வந்துட்டேன்" என்று குழந்தையை கடத்திய பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அரசன்காடு பகுதியில் வசித்து வருபவர் மாரி.. 62 வயசு... மனைவியை இழந்தவர்... மகன் சுடலை ராஜா மனைவியை பிரிந்து வாழ்பவர்.. இரண்டரை வயதில் மகாலட்சுமி என்ற மகள் இருக்கிறாள்.. மகன், பேத்தியுடன் மாரி வசித்து வந்துள்ளார். தந்தை, மகன் இருவருமே பெயின்டர்கள்!

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேண்டுதலை நிறைவேற்ற பழனி முருகன் கோயிலுக்கு பேத்தியை தூக்கி கொண்டு சென்றிருந்தார் மாரி. திரும்பி வருவதற்காக பழனி பஸ் ஸ்டேண்டில் நின்று கொண்டிருந்தபோது, ஒரு பெண் அங்கு வந்தார்.. 30 வயதிருக்கும்.. வலிய வந்து மாரியிடம் நெருங்கி நின்று பேச்சு தந்தார்.. தான் ஒரு அனாதை என்று பேச்சை ஆரம்பித்து, கடைசியில் வீட்டு வேலைக்கு வரட்டுமா என்று கேட்டதாக தெரிகிறது.

     குடிபோதை

    குடிபோதை

    அந்த பெண் மீது பரிதாபத்துடன் சபலமும் வந்துவிட்டது மாரிக்கு.. யார், என்ன என்று கூட விசாரிக்காமல் பஸ்ஸில் ஏற்றி வீட்டுக்கு வந்துவிட்டார்... வீட்டில் மகனும் வெளியூர் போயிருந்ததால் இன்னும் வசதியாக போயிற்று.. கடைக்குபோய் சரக்கு வாங்கி வந்துள்ளார்.. நன்றாக குடித்துவிட்டு அந்த பெண்ணுடன் ஜாலியாக இருந்துள்ளார்.. பிறகு போதையில் அப்படியே தூங்கியும் விட்டார்.

     சிசிடிவி கேமிரா

    சிசிடிவி கேமிரா

    பொழுது விடிந்து பார்த்தால், பேத்தியையும் காணோம், பொண்ணையும் காணோம். எங்கெங்கோ தேடிப்பார்த்து, கடைசியில் வெளியூரில் உள்ள மகனுக்கு தகவல் தந்தார்.. மகனும் போலீசாருக்கு புகார் தர, போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சம்பந்தப்பட்ட அந்த மர்மப் பெண், குழந்தையை அழைத்து செல்வது தெளிவாக பதிவாகி இருந்தது.

    மகாலட்சுமி

    மகாலட்சுமி

    இதையடுத்து, அந்த பெண்ணையும், குழந்தையையும் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.. இந்த நிலையில் பெண் ஒருவர் குழந்தையுடன் ஈரோடு போலீசில் சிக்கி இருப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசாரும் கிளம்பி சென்று பார்த்தால், அந்த குழந்தை காணாமல் போன மகாலட்சுமிதான். குழந்தையை மீட்டு, அந்த பெண்ணையும் போலீசார் கைது செய்து திருப்பூர் எஸ்பி ஆபீசுக்கு அழைத்து வந்தனர்.

     வாக்குமூலம்

    வாக்குமூலம்

    அப்போது பெண் சொன்னதாவது: "சொந்த ஊரு சேலம்.. பெயர் அல்போன்ஸ் மேரி.. 30 வயதாகிறது... பழனி பஸ் ஸ்டேண்டில் மாரியை பார்த்தேன்.. என் குடும்ப சூழலை சொன்னேன்.. நான் தனியாதான் இருக்கேன்... என்கூடவே வந்துடுங்க என்றேன்.. அதற்கு நாங்களும் எங்கள் பேத்தியுடன் தனியாகதான் இருக்கோம்... வேண்டும் என்றால் நீ எங்களுடன் வந்து விடுன்னு சொன்னார்.. அதன்படி அவருடன் வீட்டுக்கு சென்றேன்.

    போஸ்டர்கள்

    போஸ்டர்கள்

    விடிகாலையில்தான் மாரி தூங்கும் நேரம் பார்த்து குழந்தையை கடத்தினேன்.. நேராக வேளாங்கண்ணிக்கு சென்றேன்.. ஆனால் குழந்தை அப்பா, அப்பா என்று அழுது கொண்டே இருந்தது.. அதனால், என்ன செய்வது என்று தெரியாமல், திரும்பவும் பல்லடத்திலேயே விட்டுவிடலாம்ன்னு தான் ஈரோட்டுக்கு வந்தேன்.. அங்க பஸ் ஸ்டாண்டில் "குழந்தை காணவில்லை" என்று போஸ்டர் ஒட்டியிருந்தார்கள்.. அந்த போஸ்டரையும் என்னையும் மாறி மாறி பார்த்த அங்கிருந்த மக்கள் என்னை போலீசில் ஒப்படைச்சிட்டாங்க" என்றார்!

    English summary
    kidnapped 2 year old baby and woman arrested near tiruppur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X