திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

100 கோடி முதலீடு செய்தால்.. மக்கள் சேவை செய்வார்களா?… சீமான் சுளீர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Seeman Speech: வேலூரில் வெளுத்த வாங்கிய சீமான்- வீடியோ

    திருப்பூர்: ஓட்டுக்கு பணம் கொடுக்க வருபவர்களை வாக்காளர்கள் விரட்டி அடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெகநாதனை ஆதரித்து, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டதில் பேசினார் சீமான்.

    அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தான் மட்டும் பக்கத்து நாடாக இல்லை என்றால், பா.ஜ.க-வுக்கு அரசியல் செய்ய எதுவுமே இருந்திருக்காது என்றார்.

    ராகுல் சொல்வாரா?

    ராகுல் சொல்வாரா?

    ராகுல் வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், கட்சத்தீவு மீட்கப்படும் என ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், அதை ராகுல் சொல்வாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

    நாலாபக்கமும் ரவுண்டு கட்டி நிற்கும் சவால்கள்.. தர்மபுரியில் தர்மசங்கடத்தில் அன்புமணிநாலாபக்கமும் ரவுண்டு கட்டி நிற்கும் சவால்கள்.. தர்மபுரியில் தர்மசங்கடத்தில் அன்புமணி

    100 கோடிக்கு முதலீடு

    100 கோடிக்கு முதலீடு

    மேலும், 100 கோடிக்கு முதலீடு செய்யும் முதலாளி, ஆயிரம் கோடி சம்பாதிக்க பார்ப்பார். முதலீடு செய்பவர் லாப தேவைக்கு முதலீடு செய்வாரா? அல்லது மக்கள் சேவைக்கு முதலீடு செய்வாரா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    சிந்திக்க வேண்டும்

    சிந்திக்க வேண்டும்

    படித்த இளைஞர்கள், அறிவார்ந்த சொந்தங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கூறிய சீமான், கொத்தமல்லி விற்பவரை கூட மறித்து பணத்தை பறிக்கிறார்கள் என தேர்தல் பறக்கும் படையினரை சாடினார்.

    விரட்டி அடிக்க வேண்டும்

    விரட்டி அடிக்க வேண்டும்

    பேரன்போடு இந்த மண்ணையும், மக்களையும் நாங்கள் காதலித்துக்கொண்டு இருக்கிறோம். அதை ஒருதலைக்காதல் ஆகிவிடாமல் மக்கள்தான் பார்த்துகொள்ள வேண்டும். நாட்டுக்கு நல்லதொரு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாக மாற்ற மக்கள் முன்வர வேண்டும். பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க வருபவர்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்.

    English summary
    100 crore investment for profit Or public service: Seeman question
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X