திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடமாடும் ஏடிஎம் பார்த்திருக்கோம்.. நடமாடும் திருமண மண்டபம் பார்த்திருக்கீங்களா?..திருப்பூரில் புதுமை

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடமாடும் திருமண மண்டபங்களை நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தியது பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலே புதிய திருமணங்களை புக்கிங் செய்ய திருமண மண்டபங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே புக்கான திருமணங்களும் சமூக இடைவெளியுடன் மிக குறைந்த அளவிலான சொந்தங்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு மட்டுமே நடத்த வேண்டும் என கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.

இதனால் கடந்த 4 மாதங்களாக திருமண மண்டபங்களும் கோயில்களும் பூட்டியே கிடப்பதால் மூடிக்கிடக்கும் கோயில் வாசல்களில் திருமணங்கள் நடைபெறுகின்றன. இவற்றால் பிள்ளைகளுக்கு ஆடம்பரமாக பந்தல், மேடை அமைத்து திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என பெற்றோர் கண்கலங்குகிறார்கள்.

பில்டப் வேண்டாம்.. ரஜினி குறித்த கேள்விக்கு பதில் தர ரூ 5 லட்சம் தாங்க.. நிருபரிடம் கேட்ட சரத்குமார்பில்டப் வேண்டாம்.. ரஜினி குறித்த கேள்விக்கு பதில் தர ரூ 5 லட்சம் தாங்க.. நிருபரிடம் கேட்ட சரத்குமார்

நடமாடும் திருமண மண்டபங்கள்

நடமாடும் திருமண மண்டபங்கள்

இவர்களின் மனதை குளிர்விக்க வந்துள்ளது நடமாடும் திருமண மண்டபங்கள். நாட்டிலேயே முதல்முறையாக நடமாடும் திருமண மஹால் வாகனம் உடுமலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை செய்பவர் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுபகாரியங்களுக்கு அலங்கார மேடைகள் அமைத்து தரும் தொழில் செய்து வருபவர் ஹக்கீம்.

பிரம்மாண்ட யானைகள்

பிரம்மாண்ட யானைகள்

தமிழகத்தில் பிரம்மாண்ட செயற்கை யானை, கொரில்லா மற்றும் அசையும் செயற்கை விலங்குகள் தயாரித்து புகழ்பெற்ற உடுமலை விசை விலங்கு விஞ்ஞானி சிற்பி ஆர்ட்ஸ் ஹக்கீம் நாட்டிலேயே முதல்முறையாக இந்த நடமாடும் திருமண மஹாலை அறிமுகம் செய்துள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

இதனை, உடுமலை ராயல் அரிமா சங்கத்தின் பட்டைய தலைவரும், அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான வழக்கறிஞர் கண்ணன் இன்று காந்தி நகரில் தொடங்கி வைத்தார். கொரானா காலகட்டத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் திருமண மஹால் பொதுமக்களின் தேவைக்காக அறிமுகம் செய்யப்பட்டது.

மண்டபம் போல் செட்

மண்டபம் போல் செட்

மணமக்களின் வீடுகளுக்கு அருகே மண்டபம் போல் செட் அமைத்து திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்பு அறையிலேயே உடல்வெப்பம் பரிசோதனை செய்து அனுப்புகிறார்கள்.சானிடைசர், மாஸ்க் போன்றவை வழங்கி தனி மனித இடைவெளியோடு பெரிய மண்டபத்தில் நடத்தப்படும் சுபகாரியம் போல் அமைந்துள்ளது.

பாராட்டு

பாராட்டு

இதனை வடிவமைத்த ஆர்ட்ஸ் ஹக்கீம், மறைந்த முதலமைச்சர் ஜெயலிலதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் இருந்து சிறந்த கலைஞருக்கான விருது பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mobile Marriage halls are introduced in Tiruppur Udumalaipet. Parents are welcoming this efforts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X