திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிக்கு எதிராக பேசாதீங்க.. தடுத்த போலீஸ்.. மறுத்த வைகோ.. திருப்பூரில் பதட்டம்!

பிரதமர் மோடிக்கு எதிரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் போராட்டத்தை போலீசார் தடுக்க முயன்றதால் திருப்பூரில் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Vaiko police fight | மோடிக்கு எதிராக பேசாதீங்க! தடுத்த போலீஸ், மறுத்த வைகோ!

    திருப்பூர்: பிரதமர் மோடிக்கு எதிரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் போராட்டத்தை போலீசார் தடுக்க முயன்றதால் திருப்பூரில் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    இன்று மாலை பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்தில் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமர் மோடிக்கு எதிராக மதிமுக உள்ளிட்ட திராவிட அமைப்புகள் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட திராவிட அமைப்புகள் போராடி வருகிறது.

    இந்த நிலையில் திருப்பூரில் பிரதமர் மோடிக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்டம் நடத்தி வருகிறார். மோடி திருப்பூர் வரும்போது அவருக்கு கருப்பு கொடி காட்ட வைகோ திட்டமிட்டு போராடி வருகிறார்.

    மோடிக்கு எதிராக பேசினார்

    இந்த நிலையில் திருப்பூர் அண்ணாசாலையில் தற்போது வைகோ போராட்டத்தில் பேசினார். மோடிக்கு எதிரான இந்த போராட்டம் கடந்த ஒரு மணி நேரமாக நடந்து வருகிறது. மோடிக்கு எதிராக இங்கு வைகோ கடுமையாக பேசினார். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    போலீஸ் கண்டிப்பு

    போலீஸ் கண்டிப்பு

    இதற்கிடையில் திடீர் என்று மோடிக்கு எதிரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் போராட்டத்தை போலீசார் தடுக்க முயன்றதால் திருப்பூரில் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. மோடிக்கு எதிராக வைகோ பேச கூடாது, இதனால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறி போலீசார் அவருடன் வாக்குவாதம் செய்தனர்.

    கைவிட மறுப்பு

    கைவிட மறுப்பு

    மோடிக்கு எதிரான மதிமுகவின் போராட்டத்தை கைவிட போலீசார் கோரிக்கை வைத்தனர். ஆனால் மோடிக்கு எதிரான போராட்டத்தை கைவிட வைகோ மறுப்பு தெரிவித்தார். என்ன நடந்தாலும் போராடுவோம் என்று வைகோ கூறினார். இதையடுத்து அங்கு மதிமுக தொண்டர்கள் குவிந்தனர்.

    தொடர் போராட்டம்

    தொடர் போராட்டம்

    இதனால் மதிமுக தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பாஜகவினரும் குழுமி வைகோவை போராட்டத்தை நிறுத்தும்படி கூச்சலிட்டனர். ஆனால் வைகோ போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார். தொடர்ந்து மதிமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Modi visit Tamilnadu: Police tried and failed to control MDMK protest against PM visit in Tiruppur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X