திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவுக்கு கொரோனா வைரஸ்.. இந்தியாவிற்கு குடியுரிமை சட்ட திருத்தம்.. நாஞ்சில் சம்பத் பொளேர்

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவுக்கு கொரோனா வைரஸ்.. இந்தியாவிற்கு குடியுரிமை சட்ட திருத்தம்.. நாஞ்சில் சம்பத் பொளேர் - வீடியோ

    திருப்பூர்: சீனாவில் கொரோனா வைரசால் அச்சப்படுவதை போல இந்தியாவில் குடியுரிமை சட்டத்திருத்தம் மூலம் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் , அண்டை நாடுகளும் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் சூழ்நிலையை பாஜக அரசு ஏற்படுத்தி உள்ளதாக திருப்பூரில் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

    திருப்பூரில் மஸ்ஜித் சுன்னத் வல் ஜமாஅத் சார்பில் புஷ்பா நகர் பகுதியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இலக்கிய பேச்சாளரும், திமுகவை சேர்ந்தவருமான, நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    Nanjil Sampath Corona virus as CAA

    நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: சீனாவில் கொரோனா வைரஸ் எப்படி மக்களை அச்சுறுத்தி வருகிறதோ அதுபோல இந்தியாவில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்னும் பெயரால் பாஜக அரசு மக்களை அச்சுறுத்தி வருவதாகவும், இந்த சட்டத்தால் தான் டெல்லியை பாஜக கோட்டை விட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ரேஸில் முந்துகிறார் ஜோதிமணி.. அடிக்க போகிறது யோகம்.. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாகிறாரா?ரேஸில் முந்துகிறார் ஜோதிமணி.. அடிக்க போகிறது யோகம்.. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாகிறாரா?

    வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடியவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.இதனால் மாநிலம் முழுக்க இரவோடு இரவாக, இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று. இதன்பிறகு, கைது செய்தவர்களை காவல்துறை விடுவித்தது. இதன்பிறகு, போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Nanjil Sampath in Tirupur says the BJP government has created a situation where the neighboring countries are hostile to India and threatened by the civil rights legislation in India, just as the China Corona virus is feared.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X