திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சோளம் விதைக்கையிலே".. படபடக்கும் கலர் கலர் சேலை.. யாரும்மா அது.. ஓ.. இதுதான் மேட்டரா!!

சேலைகளை வயல்வெளியில் கட்டி காட்டு பன்றிகளை விரட்டுகிறார்கள் விவசாயிகள்

Google Oneindia Tamil News

திருப்பூர்: உடுமலை பகுதியில் நெல் வயலை சுற்றிலும் சேலையால் வேலி கட்டி உள்ளனர் விவசாயிகள்.. எல்லாத்துக்கும் காரணம் காட்டு பன்றிகள்தானாம்.. இதனால், வயலை சுற்றிலும் காற்றில் சேலைகள் படபடத்துக் காணப்படுகிறது.

அமராவதி நேரடி பாசன பகுதியான கல்லாபுரம், ராமகுளம் வட்டாரத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடக்கிறது... 2800 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். மீதி இடங்களில் கரும்பு, தென்னை, மக்காச்சோளம் சாகுபடி செய்கின்றனர்.

 Near Udumalai Damage to crops Hogs Cage system

இதில், நெல் வயல்களில் இப்போது, நெற்கதிர்கள் பால் பிடித்து விளையும் தருவாயில் இருக்கின்றன.. ஏற்கெனவே பல்வேறு நோய் தாக்குதலால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன... இப்படிப்பட்ட சூழலில் காட்டுப்பன்றிகளும் வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை துவம்சம் செய்துவிடுகின்றன.. இதனால் உடுமலை பகுதி விவசாயிகள் அதிர்ந்து போய் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

காட்டுப்பன்றிகளை தடுக்க விதவித வழிகளை கையில் எடுத்து வருகிறார்கள்.. வருடா வருடம் இவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுவது இயல்புதான்.. இதை தடுக்க விவசாயிகள், நெல் வயலை சுற்றிலும் சேலையால் வேலி கட்டி உள்ளனர். காற்றில் சேலைகள் படபடக்கும்போது பயந்து காட்டுப்பன்றிகள் வயல்களுக்குள் வருவதில்லை. இதனால் பயிர்கள் பாதுகாக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மற்ற விலங்குகளைவிட இந்த காட்டு பன்றிகள்தான் அட்டகாசம் செய்துவிடுகின்றனவாம்.. அதுவும் அறுவடை சமயத்தில் வயலுக்குள் நுழைந்து பாதிப்பு தந்தால், பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது.. அதனால்தான் வயல்களில் கலர் சேலைகளை கட்டுகிறார்கள்.. இந்த சேலை காற்றில் படபடக்கும்போது, அந்த சத்தத்தை கேட்டு காட்டு பன்றிகள் ஓடிவிடும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள்.. சில சமயங்களில் தீப்பந்தங்களை ஏந்தி சென்றும் விரட்டுகிறார்கள்.

இதைதவிர, நைட் நேரத்தில் ஷிப்ட் போட்டு நைட் டியூட்டியும் பார்க்கிறார்கள்.. இருந்தாலும் வனத்துறையினர் அந்த காட்டு பன்றிகளை தடுத்து நிறுத்த ஏதாவது முயற்சி மேற்கொண்டால் நல்லா இருக்கும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். சில நேரத்தில் இந்த காட்டுப்பன்றி ஆட்களையே தாக்கிவிடுகிறதாம்.. அதனால் விவசாகிளின் உடம்பில் காயங்களும் ஏற்பட்டுவிடுகின்றன.. ஒவ்வொரு நாளும் இவர்களின் வாழ்வு போராட்டமாகத்தான் இருந்து வருகிறது!

English summary
Near Udumalai Damage to crops Hogs Cage system
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X