திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிகாலையிலிருந்து தடுப்பூசிக்கு காத்திருந்த வட மாநில தொழிலாளர்கள்.. ஆவேசமான திருப்பூர் மக்கள்

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் தடுப்பூசி போட வடமாநில தொழிலாளர்கள் திரண்டதால் உள்ளூர் மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

North India workers who come for vaccination sent back by local people In Tirupur

திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தங்களது ஊழியர்களை பெரியாண்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக அழைத்து வந்துள்ளது. அவர்களில் பெரும்பகுதியினர் வட மாநில தொழிலாளர்களாகும்.

அழைத்துவரப்பட்ட ஊழியர்கள் அதிகாலை 2.30 மணி முதல் வரிசையில் நின்றுள்ளனர். ஆனால், காலையில் அப்பகுதி மக்கள் தடுப்பூசி போடுவதற்கு சென்றபோது, ஏற்கனவே நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் முன்னால் நிற்பதை பார்த்த ஊர் மக்கள் தங்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அங்கிருந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

குமரிக்கு பக்கத்துல சீனா- கூப்பாடு போடும் தமிழகம்-மத்திய அரசோ இலங்கைக்கு 0 மில்லியன் டாலர் கடன் குமரிக்கு பக்கத்துல சீனா- கூப்பாடு போடும் தமிழகம்-மத்திய அரசோ இலங்கைக்கு 0 மில்லியன் டாலர் கடன்

இதையடுத்து தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. போலீசாரும் அதிகாரிகளும் உள்ளூர் மக்களை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தனர். இதனிடையே உள்ளூர் மக்கள் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என, தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்த வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அதனை தொடர்ந்து உள்ளூர் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

North India workers who come for vaccination sent back by local people In Tirupur

நாடு முழுக்க தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் இதுபோன்ற மோதல்களும் நடைபெற ஆரம்பித்துள்ளன. மத்திய அரசு உடனடியாக போதிய தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார்கள் அதிகாரிகள்.

English summary
In Tirupur, workers from the North India waited to be vaccinated against corona, sparking an argument with local authorities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X