திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    Vijaykanth speech in tiruppur | திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு, தொண்டர்கள் உற்சாகம்

    திருப்பூர்: தமிழகத்தில் நமது தர்மபிரபுவான விஜயகாந்தின் ஆட்சி மலர்ந்தே தீரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

    திருப்பூரில் அந்த மாவட்ட தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை திருப்பூர்- காங்கேயம் சாலையில் உள்ள ஓட்டல் மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்

    இங்கு சுற்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் காவல் ஆணையர் மிக கடுமையாக செயல்பட்டுள்ளார். பேனர் வைக்க கூடாது என்றால் அதை ஏற்கும் கட்சி தேமுதிக.

    ஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்ஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்

    தீர்மானம்

    தீர்மானம்

    நீங்கள் சொல்லி அதை ஏற்கும் நிலையில் தேமுதிக இல்லை. இங்குள்ள பேனர் தேமுதிக தொண்டர்களின் வியர்வையில் வந்தது. இது முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி. சாலையில் வீசப்பட்ட பேனர்களால் தொண்டர்கள் கவலை அடைந்தனர். ஒவ்வொரு தீர்மானமும் தலைவரால் இயற்றப்பட்டது.

    தேமுதிக கோரிக்கை

    தேமுதிக கோரிக்கை

    அன்னை மொழியை காப்போம். அனைத்து மொழியையும் கற்போம் என்பதே கொள்கை. கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள். நீதியரசர்கள் இதை கவனிக்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை வைக்கிறது.

    அனுமதிக்க மாட்டோம்

    அனுமதிக்க மாட்டோம்

    ஜி.எஸ்.டி. யால் நெசவும் பின்னலாடை தொழிலும் நசிந்து வருகிறது. விரைவில் பிரதமரை சந்தித்து தொழில் வளம் பெற திட்டங்களை அறிவிக்க தேமுதிக வலியுறுத்தும். தமிழக முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈட்டி வந்துள்ளார். வாகனங்கள் வாங்கும் போது சாலை வரி செலுத்துகிறோம். எனவே சுங்க சாலை கட்டண உயர்வை அனுமதிக்க மாட்டோம்.

    கலாசாரம்

    கலாசாரம்

    100 நாட்கள் ஆட்சி செய்த மத்திய அரசு என்ன செய்தது என கேட்கிறார்கள். காங்கிரஸ் 100 ஆண்டுகள் ஆட்சி செய்தது. என்ன செய்தது. உப்பு தின்றால் தண்ணீர் குடித்தாக வேண்டும். ப.சிதம்பரம் ஜாமீன் தேடி அலைந்து வருகிறார். நீண்ட தூக்கத்தில் இருந்து இப்போது தான் முழித்துள்ளார். பேனர் கலாச்சாரத்தை துவக்கியதே திமுகவினர் தான்.

    பேனர் வேண்டாம்

    பேனர் வேண்டாம்

    அதிமுக பேனர் விழுந்ததும் இனி பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்கிறார். கேப்டன் கட்சி துவங்கிய பின் திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை. இனி வர முடியாது. கட்சியினரின் பணத்தை காக்கவே பேனர் வைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். நீங்கள் நல்ல உதாரணமாக இல்லாமல் அறிவுரை சொன்னால் யார் ஏற்பார்கள்.

    எதிர்க்கட்சித் தலைவர்

    எதிர்க்கட்சித் தலைவர்

    தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என வரலாற்றை படைத்தவர் கேப்டன். ஸ்டாலின் அதை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். தேமுதிக முப்பெரும் விழா அறிவித்த உடன் அதை காப்பியடித்து திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா நடத்துகிறது.
    தடை செய்யப்பட வேண்டிய கட்சியாக திமுக உள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசும் கட்சி திமுக.

    தர்மபிரபு

    தர்மபிரபு

    ப.சிதம்பரத்தை கைது செய்து விட்டார்கள் என்.ஐ.ஏ. அபாயத்தில் திமுக உள்ளதால் தானும் கைது செய்யப்பட்டுவேம் என ஸ்டாலின் அடக்கி வாசிக்கிறார். அண்ணாவுக்கு 111வது பிறந்தநாள் திமுகவுக்கு பட்டை நாமம் போடும் நாள். அர்ஜூனராக கிருஷ்ணராக இருந்து தமிழ்நாட்டை காப்பவர் கேப்டன். கர்ணனாக, தருமராக நமது தர்மபிரபுவின் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தே தீரும் என்றார் பிரேமலதா.

    English summary
    Premalatha Vijayakant says that DMDK will come to power in Tamilnadu very soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X