திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செப்.15 திருப்பூர் மாநாடு தேமுதிகவுக்கு திருப்புமுனையை தரும்.. பிரேமலதா நம்பிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    திருப்பூர் மாநாடு தேமுதிகவுக்கு திருப்புமுனையை தரும்.. பிரேமலதா

    திருப்பூர்: காஷ்மீர் விவகாரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அரசியல் செய்கின்றனர் என திருப்பூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார்.

    திருப்பூரில் செப்டம்பர் 15 அன்று தேமுதிக சார்பில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திருப்பூர் காங்கேயம் சாலையில் நடைபெற்றது. இதில் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு கால்கோள் நாட்டினர்.

    Premalatha Vijayakant says that Tiruppur conference will be turning point to us

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பர் 15 திருப்பூரில் நடைபெறுகின்ற பொதுக் கூட்டம் திருப்புமுனை பொதுக்கூட்டமாக அமையும். முதல்வர் வெளிநாடு பயணம் வெற்றி பெற தேமுதிக சார்பில் வாழ்த்தி வழி அனுப்பியதோடு தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம்.

    ஜெயலலிதா காலில் விழுந்தது இயற்கை.. ஆனால் எடப்பாடி காலில் விழுவது செயற்கை.. தினகரன்ஜெயலலிதா காலில் விழுந்தது இயற்கை.. ஆனால் எடப்பாடி காலில் விழுவது செயற்கை.. தினகரன்

    காஷ்மீர் விவகாரத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்து வருகிறது. பாதுகாப்பிற்காக மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். நாட்டின் பொருளாதார சரிவு வேதனை அளிக்கிறது. மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக இருந்தாலும் அது மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துவிடக் கூடாது.

    இதுகுறித்து பிரதமரிடம் நேரடியாகவே சில கோரிக்கைகள் வைத்துள்ளதாகவும் ஜிஎஸ்டி வரி பிரச்சனைகளில் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும் தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துகிறேன். பெண்கள் இதுபோன்ற உயர் பதவியை பெறுவது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

    English summary
    DMDK Treasurer Premalatha Vijayakant says that A conference which will be held in Tiruppur becomes turning point for the party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X