திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்பூரில் திடீர் என டீ கடைக்குள் நுழைந்த ராகுல் காந்தி- செல்பி எடுத்த ஊழியர்கள்

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திடீர் என டீ கடைக்குள் சென்றார். அப்போது டீ கடை ஊழியர்கள், பொதுமக்கள் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Recommended Video

    கோவை: தமிழகம் எனது ரத்த உறவு.. பிரச்சாரத்தில் உருகிய ராகுல்..!

    கோவை மண்டலத்தில் மூன்று நாட்கள் தேர்தல் பிரச்சார பயணமாக ராகுல் காந்தி இன்று வருகை தந்தார். இன்று காலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி வருகை தந்தார்.

    Rahul Gandhi stops for tea at shop in Tiruppur

    அவிநாசியில் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காரில் சென்ற ராகுல் காந்தி அவிநாசியம் பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காரை திடீர் என நிறுத்த சொல்லி அருகில் இருந்த பேக்கரி கடைக்கு சென்றார். அவருடன் மாநில மாவட்ட நிர்வாகிகளும் உடன் சென்று 15 நிமிடத்திற்கும் மேலாக அமர்ந்து டீ குடித்தனர்.

    அங்கு இருந்த பெண் ஒருவரிடம் உடல் நலம் விசாரித்து அவருக்கு இனிப்புகள் வழங்கினார் ராகுல் காந்தி. அதனை தொடர்ந்து டீ கடை ஊழியர்களுடன் செல்பி எடுத்து கொண்டார் ராகுல்.

    ராகுல் காந்தியின் திடீர் வருகையால் பேக்கரி முன்பு கூட்டம் கூடியது. அங்கு திரண்ட மக்களிடம் கை கொடுத்து விட்டு விடை பெற்று சென்றார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியை காண்பதற்காக பெண்களும் குழந்தைகளும் ஆர்வமாக திரண்டதால் அப்பகுதி பரபரப்பாக இருந்தது.

    English summary
    Senior Congress leader Rahul Gandhi on Saturday stopped for tea at a shop in Tiruppur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X