• search
திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆபாச பேச்சு.. ரவுடி பேபி சூர்யா யூடியூப் சேனலை முடக்குங்கள்.. போலீசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

திருப்பூர் : ஆபாசமாக பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதாக புகார் எழுந்த காரணத்தால், ரவுடி பேபி சூர்யாவின் யூடியூப் சேனலை முடக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  கலாச்சாரத்தை சீரழிகின்றனர்.. GP Muthu உள்ளிட்ட 4 பேர் மீது போலீசில் புகார்

  ஆபாசமாக பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவரும் ரவுடி பேபி சூர்யா, ஜி.பி.முத்து, சுகந்தி சகோதரிகள், சாதானா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எம்.எம்.கே.முகைதீன் என்பவர் அண்மையில் புகார் அனுப்பி இருந்தார்,

  அவர் தனது புகாரில் சமீபகாலமாக வலைதளங்களில் ஆபாச வீடியோ பதிவுகள் அதிக அளவில் வலம் வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது‌.

  ஜிபி முத்து

  ஜிபி முத்து

  இதை பயன்படுத்திய பேஸ்புக் , ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்பாவி மாணவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் 1,ஜிபி முத்து, 2. திருச்சி சாதனா, 3. பேபி சூர்யா, 4.சிக்சர் என்ற சிக்கந்தர் மேலும் பலர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

  நடவடிக்கை தேவை

  நடவடிக்கை தேவை

  இந்த வீடியோக்களை லட்சக்கணக்கானோர் காண்கின்றனர். இவர்களின் உடல் பாவனைகளும் பேச்சுக்களும் தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும். குறிப்பாக இதை காணும் சிறுவர், சிறுமிகளின் மனதை பாதிப்படைய செய்யும் வகையில் ஆபாச பதிவுகள் உள்ளது. இளைய சமுதாயத்தை பாதிக்கும் இத்தகைய இணையதளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும், மாணவர்கள் மத்தியில் விஷத்தை பரப்பும் கொடிய உள்ளம் கொண்ட ஆபாச பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற பதிவுகள் மேலும் தொடராமல் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

  ரவுடிபேபி சூர்யா யூடியூப்

  ரவுடிபேபி சூர்யா யூடியூப்

  இதேபோல் பலரும் ரவுடி பேபி சூர்யா உள்பட 4 பேர் மீது புகார் கூறினர் இது தொடர்பாக வார இதழ்கள் மற்றும் பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளிவந்தது. இந்தசூழலில் இந்த புகார் தொடர்பான வழக்கு இன்று திருப்பூர் முதன்மை அமர்வு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த யூடியூப் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

  ஆக்சன் பாயும்

  ஆக்சன் பாயும்

  நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் ரவுடி பேபி சூர்யாவின் யூடியூப் சேனல் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோல் ஜி.பி.முத்து, சுகந்தி சகோதரிகள், சாதானா, திவ்யா மற்றும் யூடியூப்களில் ஆபாசமாக பதிவிடுவோர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

  English summary
  Thirupur court order to police, Rowdy Baby Surya youtube channel to be blocked due to porn talk.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X