திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடிக்கு ஓட்டு போடுங்கள் என ரஜினி சொல்லவேயில்லையே.. சத்யநாராயணராவ் திடீர் பேட்டி

Google Oneindia Tamil News

திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள் என ரஜினிகாந்த் கூறவில்லை என அவரது அண்ணன் சத்யநாராயணராவ் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என அறிவித்தார். அப்போது ரஜினியின் ஆதரவு யாருக்கு என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது ரஜினி, குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என கூறியிருந்தார். இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

அரசியலில் நீங்கள் புலியா? எலியா? இதுக்கு சரியான பதில் சொல்லுங்க பார்க்கலாம்!

அறிவிப்பு

அறிவிப்பு

அந்த தேர்தல் அறிக்கையில் ரஜினி எப்போதும் வலியுறுத்தி வந்த நதி நீர் இணைப்புக்கு தனி ஆணையம் அறிவிக்கப்படும் என அறிக்கையில் வெளியானது.

பிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்பிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்

கோரிக்கை

கோரிக்கை

இதுகுறித்து ரஜினியிடம் கேட்டபோது பாஜக தேர்தல் அறிக்கையை தாம் வரவேற்பதாக கூறியிருந்தார். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

மறைமுக ஆதரவு

மறைமுக ஆதரவு

இந்த நிகழ்வுகள் ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடித்தாற்போல் ரஜினி பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லவும் இல்லை. ஆனால் ரஜினியின் கோரிக்கையை பாஜக நிறைவேற்றுவதாக மறைமுகமாக தெரிவித்தது.

சட்டசபை

சட்டசபை

இதனால் பாஜகவுக்கு ரஜினி ஆதரவு என்றே தகவல்கள் பரவின. இந்த நிலையில் திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் நடிகர் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ரஜினி சொன்னபடி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்.

தெளிவாகும்

தெளிவாகும்

மோடியின் நல்ல திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார். அதே நேரத்தில் மோடிக்கு வாக்களிக்குமாறும் ரஜினி கூறவில்லை. மே 23-ம் தேதி, அதாவது வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரியவரும். ரஜினி - கமல்ஹாசன் இடையிலான நட்பு என்றைக்கும் நிலைக்கும் என்றார்.

English summary
Rajnikanth's brother Satyanarayana Rao says that Rajini didnt ask his fans to vote for Modi. At the same time he welcomes Modi's people welfare projects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X