திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவங்களுக்கு இதயமே இல்லையா?.. யானைகளை கொடுமைப்படுத்தும் கொடூரர்கள்.. ஷாக் வீடியோ!

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனப்பகுதியில் சிலர் யானைகளை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    திருப்பூர்: யானைகளை குச்சியால் அடித்து துன்புறுத்தும் இளைஞர்கள்... பகீர் வீடியோ!

    இதுபோல் தொடர் சம்பவங்கள் நடந்து வருவதால் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     A. வீரமணி... H. வீரமணி.. S. வீரமணி.. வெலவெலத்து போன A. வீரமணி... H. வீரமணி.. S. வீரமணி.. வெலவெலத்து போன "சீனியர்".. கடுப்பான எடப்பாடியார்.. அட கொடுமையே!

     யானை படும்பாடு

    யானை படும்பாடு

    சாதுவான விலங்கான யானை இந்த மனிதர்களிடம் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே ரயிலில் அடிபட்டு ஏராளமான யானைகள் உயிரிழக்கின்றன. இது மட்டுமின்றி யானைகள் வாயில் வெடி வைப்பது, தீ வைப்பது என்று மனிதர்கள் கொடுக்கும் துன்பத்துக்கு அளவே இல்லை.

     பழங்குடி இளைஞர்கள் துன்புறுத்துகின்றனர்

    பழங்குடி இளைஞர்கள் துன்புறுத்துகின்றனர்

    இந்த நிலையில் இந்த மனிதர்களை திருத்தவே முடியாது என்பதுபோல் இன்னொரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அங்குள்ள பழங்குடி இளைஞர்கள் வனப்பகுதியில் வைத்து குட்டி யானை உள்பட மூன்று யானைகள் கொண்ட கூட்டத்தை துன்புறுத்துகின்றனர்.

     கொடூர தாக்குதல்

    கொடூர தாக்குதல்

    நாய்கள் உதவியுடன் யானைகளை துரத்துவது, அதன் மீது கற்களை வீசுவது, கம்பு, கட்டைகளை வைத்து யானைகளை தாக்குவது என்று யானைகளை தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டேயிருக்கின்றனர். ஆனால் அந்த யானைகள் இவர்களை ஏதும் செய்யாமல் தாக்குவதை தாங்கிக் கொண்டு சாதுவாக நிற்கிறது.இதயத்தை நொறுங்கச் செய்யும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

     இதயமே இல்லையா?

    இதயமே இல்லையா?

    இவர்களுக்கு இதயமே இல்லையா? இவர்களையும் இதேபோல் அடிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுபோல் தொடர் சம்பவங்கள் நடந்து வருவதால் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். யானைகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    English summary
    A video of some elephants attacking the Udumalaipettai forest in Tirupur district has come as a shock
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X