திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பன்றி விலை ரூ 3000.. உங்க மதிப்பு வெறும் ரூ. 500தான்.. தன்மானத்தோடு இருங்க.. அதிரடி போஸ்டர்!

பல்லடம் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

திருப்பூர்: "ஒரு பன்றி விலை 3 ஆயிரம் ரூபாய்.. ஆனால் ஒரு ஓட்டுக்கு தரப்படும் விலை 500 ரூபாய்.. அதாவது பன்றி விலையைவிட ஓட்டு விலை குறைவு.. பார்த்து கவனமா இருங்க.. தன்மானத்துடன் ஓட்டு போடுங்க" என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் விழா என்றாலே தொகுதிகளுக்குள் தாராளங்கள் காட்டப்படுவது இயல்பாகி விட்டது.. தேர்தல் நடத்தை விதிகளும், தேர்தல் அதிகாரிகளும் என்னதான் விழிப்புடன் இருந்தாலும், பணப்பட்டுவாடாவை தடுக்க முடிவதில்லை.

 single vote price is less than the price of a pig, poster in palladam

பலவித வடிவங்களில், பலவித யூகங்களில் இந்த பண விநியோகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஓட்டுக்கு இவ்வளவு தருகிறோம் என்ற வெளிப்படை பேரமும் நடக்கும் அவலம் நீடித்து வருகிறது. இப்போது உள்ளாட்சி தேர்தலும் 2 கட்டமாக நடக்க உள்ளது...

இதிலும் பஞ்சாயத்து தலைவர் பதவிகளை ஊர் மக்கள் ஏலம் விடும் அவலம் நீடித்து வருகிறது.. பணம் கொடுத்தால் பஞ்சாயத்து தலைவர் ஆகலாம் என்ற நிலைமை ஆங்காங்கே ஏற்பட்டுள்ளது! இந்நிலையில், ஒரு போஸ்டர் திருப்பூர் மக்களின் கவனத்தை திசை திருப்பி உள்ளது.. அது ஒரு விழிப்புணர்வு போஸ்டர் என்றுகூட சொல்லலாம்.. ஓட்டுக்கு பணம் தருவதை விமர்சித்துதான் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

போராட்டக்களமான தமிழகம்.. சென்னை, கோவை, மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.. போலீஸ் குவிப்பு!போராட்டக்களமான தமிழகம்.. சென்னை, கோவை, மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.. போலீஸ் குவிப்பு!

"தேர்தலில் வாக்குகளை விற்போர் மற்றும் வாங்குவோர் கவனத்திற்கு" என்று தலைப்பில் பல்லடம் பகுதிகளில் கரைப்புதூர் மக்கள் மன்றம் சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது. அந்த போஸ்டரில் "எருமை மாடு 50 ஆயிரம் ரூபாய், பசு மாடு 40 ஆயிரம் ரூபாய், ஆடு 10 ஆயிரம் ரூபாய், நாய் 25 ஆயிரம் ரூபாய், பன்றி 3 ஆயிரம் ரூபாய். ஆனால், தேர்தலில் மக்களின் விலை 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை உள்ளது. இது பன்றியின் விலையை விடக்குறைவு. சிந்தித்து பணம் பெறாமல், தன்மானத்துடன் வாக்களியுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாசகங்கள் திருப்பூர் பகுதி மக்களிடயே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இதை பார்க்கும் பொதுமக்களும், செல்போனில் படம்பிடித்து ஷேர் செய்து வருகிறார்கள்.. தேர்தல் களத்தை சந்திக்கும் நிலையில், "என்னங்கடா இது.. இப்படி இறங்கிட்டாங்களே" என்று உள்ளூர் பிரமுகர்கள் கவலையில் உள்ளனர்.. ஒரு பன்றி விலையைவிட உங்கள் ஓட்டின் மதிப்பு குறைவு என்பதை படம்போட்டு சுட்டிக்காட்டி.. இப்படி கூட விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்பதை இந்த போஸ்டர் உணர்த்தி வருகிறது.

English summary
near Palladam, Voters have been warned that "the price of a vote is less than the price of a pig" these posters viral on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X