திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவினாசி சாலையில் சோப்பு போட்டு குளித்து போராட்டம்.. ஆட்சியர் அதிரடியாக செய்த காரியம் இதுதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை சீர் செய்யக் கோரி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் - வீடியோ

    திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி சாலையில் குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாகியுள்ள சம்பவத்தை எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி நூதன போராட்டத்தின் மூலம் தீர்வு கண்டுள்ளார் ஒரு இளைஞர்.

    திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாவதை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    Social activist in Tiruppur took bath in a pit filled with drinking water

    இதனிடையே நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்ற இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் சாலையில் வீணாகிய குடிநீர் குறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை.

    இதையடுத்து இதை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல விரும்பினார். இதனால் அந்த நீரில் சோப்பு போட்டு தலைக்கு குளித்து நூதன முறையில் போராடினார்.

    இதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது. சமூக ஆர்வலர் சந்திரசேகர் நடத்திய போராட்டம் திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இன்ஜின் பேனட்களில் பெண்களை அமரவைக்காதீர்... பேருந்து ஓட்டுநர்களுக்கு உத்தரவு இன்ஜின் பேனட்களில் பெண்களை அமரவைக்காதீர்... பேருந்து ஓட்டுநர்களுக்கு உத்தரவு

    English summary
    Social activist in Tiruppur took bath in a pit filled with drinking water after a pipe was found leaking for the last few days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X