• search
திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கடை பெண்ணுக்கு ரூட் விட்ட கணவன்! வீட்டில் மனைவிக்கு நூல்விட்ட மாமானார்.. பல்லடத்தில் ஒரே அக்கப்போரு

Google Oneindia Tamil News

திருப்பூர்: பல்லடம் அருகே கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் கணவருக்குக் கள்ளத்தொடர்பு இருப்பதை சாதகமாக்கிக் கொண்ட மாமனார் மருமகளை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்திருக்கிறார். இதனால் இரண்டு குழந்தைகளின் தாய் பல்லடம் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் இந்துமதி வயது 30. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம், சரஸ்வதி தம்பதியினரின் மகன் சேதுமாதவன் ஆகியோருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு சஸ்வந்த் 5 வயது, பிரதீஷ் 3 வயது ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

5 பைசாவுக்கு பிரியாணி.. மதுரை ஹோட்டலின் கவர்ச்சிகர விளம்பரம்.. முண்டியடித்த மக்கள்.. விரட்டிய போலீஸ்5 பைசாவுக்கு பிரியாணி.. மதுரை ஹோட்டலின் கவர்ச்சிகர விளம்பரம்.. முண்டியடித்த மக்கள்.. விரட்டிய போலீஸ்

திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் 40 சவரன் நகைகள்,திருமண செலவினங்களுக்கு 5 லட்சமும் வரதட்சணையாக ஐந்து லட்சமும் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பின்னர் கணவனின் பெற்றோர் உடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்லடம் அருகே பொங்கலூர் கொடுவாய் பேருந்து நிறுத்தத்தை ஓட்டி சிறிய அளவில் மளிகை கடை நடத்தி வந்த சேதுமாதவன் அந்தக் கடை எடுக்கப்பட்டதால் புதிதாக அதே இடத்தில் கட்டப்பட்ட இரண்டு கடைகளை வாடகைக்கு பிடித்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மாற்றுவதற்காக பணமின்றி சிரமப்பட்டுள்ளார்.

புகார்

புகார்

அவரது மனைவி கொடுத்த 40 சவரன் நகைகளையும் மைத்துனர் கார்த்தி கொடுத்த நான்கு லட்ச ரூபாய் முதலீட்டை கொண்டு புதிதாக பிரமாண்டமான டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடையில் வேலை செய்துவரும் பெண் ஊழியர் ஒருவருடன் தகாத உறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

டார்ச்சர்

டார்ச்சர்

அப்பெண்ணோடு நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதை கண்ட இந்துமதிக்கு சந்தேகம் ஏற்படவே தனது கணவனை பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் மாமனார் மாமியாரோடு இருந்து வந்த இந்துமதிக்கு அவரது மாமனார் சுப்பிரமணி (74) உதவி செய்வது போல் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தாராம்.

மாமனாரிடம் கேட்டார்

மாமனாரிடம் கேட்டார்

தனை இந்துமதி தட்டிக் கேட்டதுடன் கணவரிடம் பலமுறை கூறினாராம் ஆனால் கணவன் சேதுமாதவன் அதனைக் கண்டும் காணாமல் இருந்ததோடு பெரியவர்களை அனுசரித்துப்போ என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவனின் கள்ளத்தொடர்பு குறித்து மாமனார் சுப்பிரமணி மற்றும் மாமியார் சரஸ்வதியிடம் பலமுறை இந்துமதி புகார் கூறினாராம்.

கடையில் தகராறு

கடையில் தகராறு

ஆனால் பெற்ற தகப்பன் போல் இருக்க வேண்டிய மாமானார் தன்னிடம் தவறாக நடக்க தொடர்ந்து முயற்சித்து பாலியல் தூண்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை எண்ணி வருந்திய இந்துமதி வேதனை அடைந்துள்ளார், கடையில் இருந்த கணவனிடமும் அந்தப் பெண்ணிடமும் இந்துமதி தனக்கும் தனது இரண்டு குழந்தைகளுக்கும் நியாயம் கேட்டு சண்டை போட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் கடையை விட்டு வெளியேறி விட்டதாகவும் கடை பக்கமே வரக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதை அடுத்து இந்துமதி வேங்கிபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளோடு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண் இந்துமதி தனது சகோதரர் கார்த்திக் மற்றும் உறவினர்கள் சிலருடன் சென்று பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் யிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை


இதையடுத்து போலீசார் அப்பெண்ணின் கணவர் வீட்டாரையும் இந்துமதியின் உறவினர்களையும் பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். போலீசார் சமாதானம் பேசியதுடன் கணவர் வீட்டாரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

English summary
The father-in-law has abused his daughter-in-law after he took advantage of her husband's illicit relationship with a woman working in a shop near Palladam. The mother of two has lodged a complaint with the Palladam police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X