திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் முதல் முறையாக.. திருப்பூர் காய்கறி சந்தையில் வித்தியாசமான கிருமிநாசினி சுரங்கம்

Google Oneindia Tamil News

திருப்பூர்: இந்தியாவில் முதல்முறையாக திருப்பூரில் காய்கறி சந்தையில் வித்தியாசமான முறையில் கிருமிநாசினி பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதற்கு பாராட்டுகள் குவிகின்றன.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1619ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயின் சமூக பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன்படி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செம்ம.. ஒரே கல்லில் 2 மாங்காய்.. தேனி உழவர் சந்தையில் ரூ.150க்கு விற்கப்படும் 18 காய்கறி தொகுப்பு செம்ம.. ஒரே கல்லில் 2 மாங்காய்.. தேனி உழவர் சந்தையில் ரூ.150க்கு விற்கப்படும் 18 காய்கறி தொகுப்பு

மைதானம்

மைதானம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. அது போல் சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் நெருக்கடியான காய்கறி மார்க்கெட்டை பெரிய மைதானங்களுக்கு கொண்டு சென்றுள்ளது அந்தந்த மாவட்ட நிர்வாகம்.

காய்கறி

காய்கறி

ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கிருமி நாசினி கொடுத்து மக்களை கைக்கழுவ வைக்கிறார்கள். இந்த நிலையில் திருப்பூரில் தென்னம்பாளையத்தில் ஒரு காய்கறி சந்தையில் எப்போதும் இல்லாத முயற்சியாக ஒரு கிருமிநாசினி தெளிப்பு பாதையை அமைத்துள்ளனர். இந்த பாதை வழியே காய்கறி வாங்குவோர் அனுமதிக்கப்படுகிறார்கள்.

3 முதல் 5 வினாடிகள்

3 முதல் 5 வினாடிகள்

இந்த மார்க்கெட்டுக்கு வருவதற்கு முன்னர் அவர்களுக்கு கிருமி நாசினி கொடுத்து கைக்கழுவ வைக்கிறார்கள். பின்னர் ஒரு கிருமி நாசினி சுரங்கம் எனும் பாதை வழியாக மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வழி முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளன. இந்த வழியை கடக்க 3 முதல் 5 வினாடிகள் ஆகும். இதை திருப்பூர் மக்கள் வரவேற்றுள்ளனர்.

நெட்டிசன்கள்

தமிழகத்தில் வேறெங்கும் கடைப்பிடிக்கப்படாத இந்த முயற்சியை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொண்டு வந்துள்ளார். இது மாதிரியான புது முயற்சிக்கு பாராட்டுகள் குவிகின்றன. இது போல் அனைத்து மாவட்டங்களிலும் சுத்தத்தை கடைப்பிடித்தால் கொரோனாவை எளிதாக ஒழிக்கலாம் என நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

English summary
Thiruppur Collector has set up a disinfection tunnel in Thennampalayam market in Tiruppur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X