திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்பூர் ராம்ராஜ் நிறுவன பெயரில் போலி மாஸ்க்.. 'நேர்மைநாதன் ' உட்பட 3 பேர் கைது!

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் ராம்ராஜ் நிறுவன பெயரை பயன்படுத்தி போலியாக முககவசம் தயாரித்த நேர்மைநாதன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேர்மைநாதனுடன் சீனு, முருகன் ஆகியோரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 three arrested in Tiruppur, for making fake mask using the Ramraj company name

திருப்பூரில் பிரபல நிறுவனத்தின் (ராம்ராஜ்) பெயரை பயன்படுத்தி போலியாக தரம் குறைவான மாஸ்க் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. திருப்பூர் சந்தை என்ற பெயரில் இயங்கும் பேஸ்புக் தளத்தில் இதுபற்றி ஆர்எஸ் சீனு என்பவர் விளம்பரம் செய்திருந்தார்.

"செம பீஸ்".. ஒரு கண்ணுல ஷிவானி.. இன்னொரு கண்ணுல அனிதா.. கொண்டாடும் பிக்பாஸ் ரசிகர்கள்!

அந்த விளம்பரத்தில் தங்களிடம் ராம்ராஜ் மாஸ்க் நல்ல தரத்தில் 4500 எண்ணிக்கையில் உள்ளதாக கூறியிருக்கிறார். அதில் அவருடைய மொபைல் எண்ணையும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதை பார்த்து பலரும் விலை என்ன என்று கேட்டிருக்கிறார்கள். அத்துடன் தரம் குறித்தும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதையடுத்து போலியாக தயாரிக்கப்படுவது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது

 three arrested in Tiruppur, for making fake mask using the Ramraj company name

இது தொடர்பான புகாரையடுத்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி பின்னர் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து சீனு, நேர்மைநாதன், முருகன் என்ற 3 பேரை கைது செய்தனர்.

English summary
Police have arrested three people in Tiruppur, including Nermainathan, for making a fake mask using the Ramraj company name.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X