திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்பூரையே அதிர வைத்த பலத்த சப்தம்.. அச்சமும் வதந்தியும் வேண்டாம்.. ஆட்சியர் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் காலையில் எழுந்த சப்தம் தேஜஸ் விமானத்தின் சோனிக் பூம் சப்தம் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.

Recommended Video

    Tiruppur Sonic Boom திடீரென கேட்ட பயங்கர சத்தம்... பதறிய திருப்பூர் மக்கள்

    திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10 மணிக்கு பயங்கர சப்தம் ஒன்று கேட்டது. இந்த சப்தம் பல்லடம், கொடுவாய், முருகம்பாளையம், கருவம்பாளையம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கேட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

    Tiruppur Collector explains about loud sound

    இந்த சப்தம் நிலநடுக்கம் என சிலர் வதந்தியை பரப்பினர். இதையடுத்து இந்த சப்தம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அந்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

    படுத்தப்படுக்கையான தாய்.. பராமரிக்க ஆள் இல்லை.. படுக்கையோடு எரித்த மகன்.. தெலுங்கானாவில் சோகம்படுத்தப்படுக்கையான தாய்.. பராமரிக்க ஆள் இல்லை.. படுக்கையோடு எரித்த மகன்.. தெலுங்கானாவில் சோகம்

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இன்று காலை திருப்பூர் அருகே எழுந்த சப்தம் சூப்பர் சோனிக் தேஜஸ் விமானம் பயணித்ததால் ஏற்பட்டது. மக்கள் யாரும் தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டாம். வதந்தியை பரப்பவும் வேண்டாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Tiruppur Collector explains about loud sound

    இது திருப்பூர் மாவட்டத்திற்கு புதிதல்ல. இதே போன்றதொரு சப்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி தாராபுரத்தில் 5 கி.மீ. சுற்றளவுக்கு கேட்டதாக தகவல்கள் உள்ளன.

    English summary
    Tiruppur Collector explains about loud sound across various parts of Tiruppur. Spread rumours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X