• search
திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இந்த பெட்ரூமில் மனைவி.. பக்கத்து ரூமில் மகள்.. ஆளுக்கொரு காதலனுடன்.. அதிர்ந்த கணவர்.. ஷாக் முடிவு

Google Oneindia Tamil News

திருப்பூர்: கனகாவுக்கு ஏறிய காமம் கொஞ்ச நஞ்சமல்ல.. மனைவி கனகா ஒரு ரூமிலும்.. மகள் ஒரு ரூமிலும் காதல் லீலைகளில் ஈடுபட்டுள்ளனர்.. தாயும் - மகளும் போட்ட ஆட்டத்தை பார்த்து, கணவன் தற்கொலையே செய்து கொண்டார்!

திருப்பூர் மாவட்டம் பொம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி... அதே பகுதியில் ஒர்க் ஷாப் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.. இவரது மனைவி பெயர் கனகவள்ளி.. ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர், 12-ம் வகுப்பு படிக்கிறார்..

கனகவள்ளிக்கு டிக்டாக் என்றால் உயிராம்.. எந்நேரமும் அதிலேயே மூழ்கி உள்ளார்.. வீட்டையும், குழந்தைகளையும் கவனிப்பதே கிடையாது.. ஒரே ஆட்டம் பாட்டம்தான்.

15 வயசு பிஞ்சு.. முதலில் 55 வயசு தாத்தா.. பிறகு மேஸ்திரி, மாப்பிள்ளையும் சேர்ந்து.. ஷாக் கிருஷ்ணகிரி15 வயசு பிஞ்சு.. முதலில் 55 வயசு தாத்தா.. பிறகு மேஸ்திரி, மாப்பிள்ளையும் சேர்ந்து.. ஷாக் கிருஷ்ணகிரி

 டிக்டாக்

டிக்டாக்

அப்படி இருக்கும்போதுதான், டிக்டாக் ஒருவர் அறிமுகமாகி உள்ளார்.. இவர் ஈரோட்டை சேர்ந்தவர்.. உடனே கள்ளக்காதல் பற்றிக் கொண்டது.. ரவி எப்படா வேலைக்கு கிளம்பி செல்வார் என்று காத்திருப்பார் கனகா.. அடுத்த செகண்டே போனை எடுத்து கொண்டு, கள்ளக்காதலனை கொஞ்ச ஆரம்பித்துவிடுவார். ரவி வேலையில் இருந்து வந்ததும் செல்போன் பேச்சை நிறுத்தினாலும் ஹாட் மெசேஜ்கள் பறந்து கொண்டே தான் இருக்கும்..

 வயசு பெண்

வயசு பெண்

வீட்டில் வயசுக்கு வந்த பொண்ணு இருப்பது தெரிந்தும், கனகா செய்த சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல! கடைசியில் பொண்ணுக்கும் லவ் வந்துவிட்டது... அம்மா போலவே லவ்.. அம்மா போலவே டிக்டாக் மூலம் வந்த லவ்.. அம்மா போலவே ஈரோட்டை சேர்ந்தவருடன் லவ்.. நல்லவேளை, வேற ஒரு இளைஞன் அது!

காதல்

காதல்

அம்மா ஒரு ரூமில் காதல் லீலையில் ஈடுபட்டாள், மகள் இன்னொரு ரூமில் லவ்வில் மூழ்கி திளைப்பாராம்.. இந்த விஷயம் ரவிக்கு லேட்டாகத்தான் புரிந்துள்ளது.. ஆளுக்கு ஒரு பக்கம் செல்போனில் யாரையோ கொஞ்சி கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது.. அதிர்ந்து போனார்.. அதனால், 2 பேரையுமே கூப்பிட்டு அட்வைஸ் தந்தார்.. ஆனால், என்ன ஆச்சரியம்? தாயும் - மகளும் 2 பேருமே வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.. 2 பேருமே தங்கள் தங்கள் காதலனுடன் மாயமானார்கள்.

 நடவடிக்கை

நடவடிக்கை

இதனால் மேலும் ஷாக் அடைந்த ரவி, அனுப்பர்பாளைய போலீசில் புகார் தந்தார்... அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையில், தாயும் - மகளும் ஈரோட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.. அவர்களை பாடுபட்டு வீட்டுக்கு மீட்டு கொண்டு வந்தார்.. திரும்பவும் அவர்களுக்கு அட்வைஸ் தந்தார்.. ஆனாலும் அந்த பெண்கள் திருந்தவில்லை. கள்ளக்காதலும், காதலும் இருவர் கண்ணையும் மறைத்தது.

கதறல்

கதறல்

ரவி கதறியது காதில் விழவில்லை.. ஆனால், மறுபடியும் அடுத்த சில நாட்களிலேயே 2 பேரும், அவரவர் காதலர்களுடன் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டனர்.. அத்துடன் ரவிக்கு கனகா போன் செய்து பேசினார்.. அப்போது, "இனிமேல் எங்களை தொந்தரவு பண்ணாதீங்க.. கள்ளக்காதலன்தான் எனக்கு முக்கியம்" என்று சொல்லி போனை கட் செய்துவிட்டார் கனகா... மகளும் அப்படியே சொல்லிவிட்டார்.

வீடியோ

வீடியோ

ஏற்கனவே பலமுறை நொந்து போன ரவி, இந்த முறை கதறி கதறி அழுதார்.. தற்கொலையே செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.. அதற்கு முன்னதாக ஒரு வீடியோவில் பேசினார்.. அதில், "என் பையனை நினைச்சாதான் கவலையா இருக்கு.. அம்மா, அப்பா ரெண்டு பேருமே இல்லாமல் அவன் இருக்க போறான்.. அவனை யாரும் பழி வாங்கிடாதீங்க.. அவன் ரொம்ப நல்லவன்.. என் அக்கா, தங்கைகளை நம்பி என் பையனை விட்டுட்டு போறேன் என்று கண்ணீருடன் ரவி சொல்லி இருந்தார்.. பிறகு தற்கொலையும் செய்துகொண்டார்.

விசாரணை

விசாரணை

இதையடுத்து, தகவலறிந்த போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.. இந்த டிக்டாக் எத்தனை பெரிய தாக்கத்தை நமக்கு ஏற்படுத்தி உள்ளது?! எத்தனை குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிட்டது? எத்தனை உயிர்களை காவு வாங்கிவிட்டது? இந்த ஆப் இப்போது ஒழிந்தாலும், , அது ஏற்படுத்திய பாதிப்பும், விளைவுகளும் இன்னமும் நம்மைவிட்டு அகலவே இல்லை!

English summary
Tiruppur man commits suicide after his wife illegal relation ship
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X