திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முககவசம் அணியாத நபரிடம் ஜாதியை கேட்ட திருப்பூர் போலீஸ்- வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் முக கவசம் அணியாத பொதுமக்களிடம் என்ன ஜாதி என போலீஸ்காரரர் ஒருவர் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    மாஸ்க் அணியாத நபரிடம் சாதியை கேட்ட திருப்பூர் போலீஸ் - வீடியோ

    உலக நாடுகளை கடந்த 8 மாதங்களாக உலுக்கி எடுத்து வருகிறது கொரோனா தொற்று நோய். உலக நாடுகளில் இதுவரை மொத்தம் 10,66,984 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

     சூப்பர்... சூப்பர்... "இந்த" விஷயத்தில் பாஜகவை விட ஸ்டாலின் எவ்வளவோ பரவாயில்லை.. ஆனால் அதிமுக சுதாரிக்கணும்!

    கொரோனா மரணங்கள்

    கொரோனா மரணங்கள்

    இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 39,430 பேரும் 2-வதாக தமிழகத்தில் 10,052 பேரும் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.

    அரசு பிரசாரங்கள்

    அரசு பிரசாரங்கள்

    கொரோனாவுக்கு மருந்து இன்னமும் கண்டுபிடிக்காத சூழ்நிலையில் முக கவசம் அணிதல் உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகள்தான் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கழுவுதல் உள்ளிட்டவை குறித்து அரசு தரப்பில் தீவிர பிரசாரம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டும் வருகிறது.

    திருப்பூரில் ஜாதி கேட்ட போலீஸ்

    திருப்பூரில் ஜாதி கேட்ட போலீஸ்

    பல இடங்களில் முக கவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. திருப்பூரில் இதேபோல் முக கவசம் அணியாமல் சென்ற தம்பதியை போலீஸ் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் விசாரணை என்ற பெயரில் ஊர், பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்ட போலீசார், ஜாதி என்ன என்றும் கேட்டிருக்கின்றனர்.

    அங்க அடையாளம்

    அங்க அடையாளம்

    இதனால் கொதித்து போன அந்த தம்பதியினர், அது எப்படி ஜாதியை கேட்கலாம்? பொது இடத்தில் என்ன ஜாதி என கேட்க ரூல்ஸ் இருக்கிறதா? என ஆவேசம் காட்டினர். அப்போது, அங்க அடையாளத்தை சொல்லுங்க என போலீஸ் மீண்டும் கேட்க நான் என்ன அக்யூஸ்டா என ஆவேசப்பட்டார் அந்த நபர். இதனை அப்படியே வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுவிட்டனர்.

    போலீஸ் மீது நடவடிக்கை

    போலீஸ் மீது நடவடிக்கை

    திருப்பூர் போலீசாருடனான இந்த வாக்குவாத வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மிக கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெரியார் சிலைக்கு மாலை போட்ட ஒரே காரணத்துக்காக 3 போலீசாரை இடம் மாற்றம் செய்தவர்கள், இதுபோல் ஜாதியை கேட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? என்கிற கேள்வியையும் முன்வைத்தனர். இதனையடுத்த அந்த போலீஸ்காரர் இப்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளாராம்.

    English summary
    A Controversy was erupted over the Tiruppur Police asking caste for without wearing Mask.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X