திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அபாரம்.. தமிழே தெரியாமல் திருப்பூர் வந்த குழந்தை தொழிலாளி - +2வில் 85% மார்க் பெற்று அசத்தல்!

ஆந்திராவில் தெலுங்கு மொழியை இரண்டாம் பாடமாக படித்து வந்த மாணவி திருப்பூர் வந்து ஐந்து ஆண்டுகளில் தமிழ் படித்து முன்னேறி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 85 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

Google Oneindia Tamil News

திருப்பூர்: தமிழே தெரியாமல் திருப்பூருக்கு வந்து குழந்தை தொழிலாளியாக வேலை செய்து பள்ளியில் சேர்ந்து படித்து இப்போது ப்ளஸ் 2வில் 85 சதவிகித மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். மேற்படிப்பு படிக்க தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்பது மாணவியின் கோரிக்கையாகும். திருப்பூர் வந்த 5 ஆண்டுகளில் தமிழ் மொழி நன்றாக படித்து பனிரெண்டாம் வகுப்பில் 85 சதவிகிதம் மார்க் எடுத்து தேர்ச்சி பெற்ற மீனாவிற்கு பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் கோபால்.இவரது மனைவி மல்லிகா இவர்கள் இருவரும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பிழைப்புத் தேடி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் சென்று 20 வருடங்கள் அங்கு வசித்து வந்தனர். இவர்களுக்கு மீனா என்ற மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். மூவரும் அங்கு உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

Tirupur Child laborer record in Plus 2 Mark

ஆங்கில மொழிப் பாடத்தை முதல் படமாகவும் தெலுங்கு மொழியை இரண்டாம் பாடமாக எடுத்துப் படித்து வந்தனர்.எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் வறுமையின் காரணமாக கோபால் தனது குடும்பத்தினருடன் திருப்பூருக்கு பிழைப்பு தேடி வந்தார்.திருப்பூரில் பூலுவபட்டியில் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். திருப்பூர் வந்த மீனா தமிழ் தெரியாததால் பள்ளியில் சேர்ந்து படிக்காமல் வீட்டில் அவரது தாயாருடன் பீஸ் ரேட் வேலை செய்து வந்தார்.

அப்பொழுது அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட குழந்தைத் தொழிலாளர் நல வாரிய அதிகாரிகள் மீனாவிடம் வேலைக்குச் செல்லாமல் படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Tirupur Child laborer record in Plus 2 Mark

மீனாவிற்கு தமிழ் தெரியாததால் பள்ளிக்கு செல்லாமல் பணிபுரிந்து வருவதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர்.எனவே அதிகாரிகள் மீனாவை அதே பகுதியில் இருந்த அரசு பள்ளியில் சேர்த்தனர்.தமிழ் வழி கல்வியில் சேர்த்ததால் மீனா படிக்க முடியாமல் திணறி வந்துள்ளார். இதனையடுத்து மீனாவை ஆங்கில வழிக்கல்வியில் மாற்றினர்.அங்கு ஆங்கில வழிக்கல்வியில் தமிழ்மொழி படத்தை இரண்டாம் பாடமாக எடுத்து படித்த வந்தார்.

Tirupur Child laborer record in Plus 2 Mark

திருப்பதி ஏழுமலையான் கோயில்...கொரோனா தொற்று... அர்ச்சகர் ஒருவர் உயிரிழப்பு!!திருப்பதி ஏழுமலையான் கோயில்...கொரோனா தொற்று... அர்ச்சகர் ஒருவர் உயிரிழப்பு!!

ஆசிரியர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த மீனா அவர்களின் சிறப்பு வகுப்புகள் மூலம் 406 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்தார்.முதலிடம் பிடித்த அவரை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அழைத்து பாராட்டி வெகுமதிகள் வழங்கினார்.அதனை அடுத்து மீனா திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்தார்.

அங்கும் ஆசிரியர்கள் இவர் மீது தனி கவனம் செலுத்தி சிறப்பு வகுப்புகள் எடுத்தனர். இதனால் பன்னிரண்டாம் வகுப்பில் தீவிர முயற்சி எடுத்து நன்றாக படித்த மீனா 85 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். திருப்பூர் வந்த 5 ஆண்டுகளில் தமிழ் மொழி நன்றாக படித்து பனிரெண்டாம் வகுப்பில் 85 சதவிகிதம் மார்க் எடுத்து தேர்ச்சி பெற்ற மீனாவிற்கு பள்ளி ஆசிரியர்கள்,உடன் பயின்ற மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tirupur Child laborer record in Plus 2 Mark

மேற்படிப்பு படிக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்த மீனா ஏழ்மை நிலையில் உள்ளதாலும், தாய் தந்தை பின்னலாடை நிறுவனத்தில் பணி புரிவதாலும் கல்லூரி படிப்புக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

English summary
Meena, 17 year old girl from Andra pradesh studing in Tirupur corporation girl school has 85% mark in plus 2 examination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X