திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்ரைட்டா சிஎம்முக்கே கோரிக்கை வைத்த விஜய் ரசிகர்.. கிடைத்த இன்ப அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

திருப்பூர்: ட்விட்டரில் முதல்வர் எடப்பாடியருக்கு திருப்பூரைச் சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை நிறைவேற்றுவற்கான நடவடிக்கையில் இறங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்.

திருப்பூரைச் சேர்ந்த ஹரி என்பவர் தீவிர விஜய் ரசிகர் என்பது அவரது ட்விட்டர் பதிவுகளை பார்த்ததில் தெரிந்தது. அவர் வாத்தி ரெய்டு என்ற புனைப்பெயரில் இயங்கி வந்துள்ளார். ஹரி ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்,

Tirupur District Collector Vijayakarthikeyan helps vijay fan on twitter

அந்த ட்விட் பதிவில், "ஐயா முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, என் தங்கச்சி திருப்பூர்ல தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள் அவளுக்கு இன்னைக்கு அரையாண்டுதேர்வு.. கடந்த ஆண்டிலிருந்து எங்க அப்பா சரியில்லாத காரணத்தினால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை.. அதனால் பள்ளியிலிருந்து தேர்வுக்கான லிங்க்கை அனுப்பவில்லை என்று கூறியிருந்தார்.

ராமதாஸ் எடுத்த புது அஸ்திரம்.. அரசுக்கு வைத்த கோரிக்கை.. ஏற்பாரா எடப்பாடியார்.. செம்ம திருப்பம்!ராமதாஸ் எடுத்த புது அஸ்திரம்.. அரசுக்கு வைத்த கோரிக்கை.. ஏற்பாரா எடப்பாடியார்.. செம்ம திருப்பம்!

அத்துடன் இன்னொரு ட்வீட்டில் தங்கைக்கு பாடமும் நடத்தப்படவில்லை தேர்வு லிங்கை உம் அனுப்பவில்லை... இதனால் இன்று தேர்வு எழுத முடியாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறாள் ..அரசு பள்ளியில் சேர்க்கலாம் நு பார்த்தா கட்டணம் செலுத்தாமல் TC தர மாட்டிங்கராங்க... இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும் ஐயா. என்று கோரியிருந்தார்.

Tirupur District Collector Vijayakarthikeyan helps vijay fan on twitter

இதற்கு பதில் அளித்த திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் விஜயகார்த்தியேன், உங்களை தகவலை கூறுங்கள் என்று கேட்டு நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு விஜய் ரசிகர் ஹரி நன்றியும் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ட்விட்டர்வாசிகள் பலர் திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்தியேனை பாராட்டி வருகிறார்கள். ஹிரியின் தங்கை நிலையில் தான் இன்று பல குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கஷ்டப்படுகிறார்கள், அவர்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

English summary
A Vijay fan from Tiruppur had made a request to Chief Minister Edappadi palanisamy on Twitter. Tirupur District Collector Vijayakarthikeyan has granted the request.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X