திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட... இது செம ஐடியாப்பா! - திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் எண்ணம் பட்ஜெட்டில் எதிரொலிக்குமா?

Google Oneindia Tamil News

திருப்பூர்: மத்திய பட்ஜெட், பிப்., 1ம் தேதி தாக்கலாகிறது. அதில், திருப்பூருக்கென பிரத்யேக முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூரில் திரும்பும் திசை எங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் வொர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

Tirupur Knitwear exports union budget 2021 expectations

அவர்களில் வடமாநில தொழிலாளர்கள் 4 லட்சம் பேர். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 லட்சம் பேர். இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதிக அளவு அன்னிய செலாவணியை ஈட்டும் தொழிலாக இருந்து வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வந்து கொண்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் உலக நாடுகள், வர்த்தகம் தொடர்பாக சீனா மீது வெறுப்பில் இருக்கும் நிலையில், திருப்பூரில் பின்னலாடை வர்த்தகமும் சற்றே அதன் பழைய நிலைமைக்கு மாறத் துவங்கியுள்ளது. முழு ஊரடங்கும் முடிந்து அரசு கொடுத்த தளர்வின் பயனாக கடந்த மாதத்தில் மட்டும் 4 ஆயிரத்து 374 கோடி மதிப்பிலான ஆடைகள் திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சரக்குகளை பெங்களூர் மற்றும் சென்னைக்கு கொண்டு சென்று அனுப்புவதற்கு பதிலாக, கோவையிலிருந்து சரக்குகளை கையாள முடியும். இதனால், போக்குவரத்து செலவு மிச்சப்படுத்தப்படும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்துள்ளோம். வரும் பட்ஜெட்டில் தொழில்துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

English summary
Tirupur Knitwear exports union budget 2021 - Full Reports
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X