திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்பூரில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா நோயாளி எண்ணிக்கை.. விழிப்புணர்வு பணியில் களமிறங்கிய போலீசார்

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது. இதனை தடுக்கும் வகையில் திருப்பூர் வடக்கு காவல்துறை சார்பில் கொரோனா பொம்மையுடன் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Recommended Video

    திருப்பூரில் கொரோனா பரவல் அதிகரிப்பு.. விழிப்புணர்வு பணியில் களமிறங்கிய போலீசார்

    திருப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது. இதனை தடுக்கும் வகையில் திருப்பூர் வடக்கு காவல்துறை சார்பில் கொரோனா பொம்மையுடன் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Tirupur North Police raised awareness in public areas

    தன்னார்வலர்களுடன் இணைந்து ஊர்வலமாக சென்றனர். மேலும் வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடம் நோயின் தீவிரம் குறித்து எடுத்து கூறி, பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டது. கொரோனா உருவம் மாதிரியே, தலையில் பொம்மை போன்ற அமைப்பை வைத்திருந்த இளைஞர், மக்களிடம், விழிப்புணர்வு பற்றி எடுத்துரைத்தார்.

    Tirupur North Police raised awareness in public areas

    இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் திருப்பூர் வடக்கு சரக காவல் உதவி ஆணையர் வெற்றிவேந்தன், வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு ஊர்வலமானது திருப்பூர் புதிய பஸ்நிலையத்தில் துவங்கி தற்காலிக உழவர் சந்தை வழியாக வந்து புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

    இன்னும் 3 நாளில் கொரோனா பிரச்சினை காலி.. முதல்வர் கூறியபடி நடக்குமா? இன்னும் 3 நாளில் கொரோனா பிரச்சினை காலி.. முதல்வர் கூறியபடி நடக்குமா?

    English summary
    The number of people affected by coronation in Tirupur rose to 80. In an effort to prevent this, the Tirupur North Police Department raised awareness in areas where the public could be crowded with a Corona doll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X