திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சார்.. பிரசவ வலி.. இஸ்லாமியர் என்பதால் மறுக்கிறாங்க... உடனே களத்தில் குதித்த திருப்பூர் கலெக்டர்

Google Oneindia Tamil News

திருப்பூர்: தமது சகோதரி ஒருவருக்கு பிரசவலி ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்லாமியர் என்பதால் மருத்துவர்கள் மறுக்கிறார்கள் எனவும் நெட்டிசன் ஒருவர் ட்விட்டர் பதிவைப் போட உடனே களத்தில் குதித்தார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்.

@thaufikrahman19 என்ற நெட்டிசன் இன்று பகல் 1 மணியளவில் தமது ட்விட்டர் பக்கத்தில், Dear @Vijaykarthikeyn @CMOTamilNadu sir என் உடன்பிறந்த தங்கைக்கு பிரசவலி வலி ஏற்பட்டு காங்கேயம் திவ்யா மருத்துவமனையில அனுமதிக்க முயன்ற போது இஸ்லாமியர்களுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என் சொல்கிறார்கள் என பதிவிட்டிருந்தார்.

TN Govt Enquire on religious based discrimination in Kangeyam Hospital

உடனடியாக திருப்பூர் ஆட்சியர் @Vijaykarthikeyn, Replying to @thaufikrahman19 and @CMOTamilNadu Any contact number. ? என களத்தில் குதித்துவிட்டார். தற்போது சமூக வலைதளத்தில் இது மிகப் பெரும் விவாதமாகவும் மாறியுள்ளது.

தருமபுரி தொகுதி திமுக எம்.பி. டாக்டர் செந்தில் இது தொடர்பாக கூறுகையில், மத அடிப்படையில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது மிகப் பெரிய குற்றம். ஆகையால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருந்தார்.

TN Govt Enquire on religious based discrimination in Kangeyam Hospital

இதற்கும் பதிலளித்துள்ள திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன், Replying to @DrSenthil_MDRD We are enquiring into this sir என குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக எம்.எல்.ஏ. டி.ஆர். பி. ராஜா இதற்கு பதிலளிக்கையில், Pls call on 7667867899 will try to do our best என தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். அதேநேரத்தில் வட இந்தியாவில்தான் மதவெறியுடன் நடந்து கொள்கிறார்கள்.. தமிழகத்திலுமா? என ஆதங்கத்தை பல நெட்டிசன்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

English summary
TN Govt is Enquiring on religious based discrimination in Kangeyam Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X