திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ம்ஹூம்.. எழ முடியாது.. இப்படித்தான் ரோட்டுல படுத்துப்பேன்.. அடம் பிடித்த டிராபிக் ராமசாமி!

தரையில் படுத்து டிராபிக் ராமசாமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Traffic Ramasamy protests again Tiruppur Road

    திருப்பூர்: "எழ முடியாது.. இப்படித்தான் ரோட்டுல படுத்துப்பேன்" என்று டிராபிக் ராமசாமி அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.

    ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திருப்பூர் வந்தார். திருப்பூர்- பல்லடம் ரோட்டில் காரில் வந்து கொண்டிருந்தபோது, ஒருசிலர் வாகன விதிகளை பின்பற்றாமல் ஒன்-வேயில் வந்து கொண்டிருந்தார்.

    Traffic Ramasamy protest in Tiruppur

    இதை பார்த்ததும் டென்ஷன் ஆன டிராபிக் ராமசாமி காரில் இருந்து இறங்கிவிட்டார். அந்த பக்கம் ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகளை வழிமறித்து அட்வைஸ் சொல்லி கொண்டிருந்தார்.

    அந்த நேரம் பார்த்து ஒரு இளைஞர், டிராபிக் ராமசாமி மீது மோதுவது போல பைக்கில் வந்து, பிறகு திடீரென மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார். இதை பார்த்து ஷாக் ஆன டிராபிக் ராமசாமி, பைக்கில் இடிப்பது போல வந்த அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடுரோட்டில் காலை நீட்டி படுத்து கொண்டார்.

    நீச்சல் குளமாக மாறிய சென்னை சாலைகள்.. பெரும் டிராபிக் ஜாமுக்கு ரெடியா போங்க மக்களே.. #chennairainsநீச்சல் குளமாக மாறிய சென்னை சாலைகள்.. பெரும் டிராபிக் ஜாமுக்கு ரெடியா போங்க மக்களே.. #chennairains

    பொதுமக்களில் சிலர் டிராபிக் ராமசாமிக்கு எதிராக பேசியதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர். ஆனால் டிராபிக் ராமசாமி படுத்த இடத்தை விட்டு எழவே இல்லை.

    "ஹெல்மட் அவங்க போடல.. ஒன் வேயில் வர்றாங்க.. இப்படி செய்யலாமா" என்று சத்தமாக சொல்லி கொண்டே இருந்தார். இதில் என்ன ஹைலைட் என்றால், டிராபிக் ராமசாமி நின்று கொண்டு இருப்பதை தூரத்திலேயே பார்த்தவர்கள், டக்கென தங்களது ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டிக் கொண்டனர்.

    English summary
    Social Activist Traffic Ramasamy protests again Tiruppur Road and aruges with Traffic Police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X