திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செம போதை.. 2 திருநங்கையர்கள் பஸ் ஸ்டாண்ட்டில் குத்தாட்டம்.. உறைந்து போன பொதுமக்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருநங்கைகள் குத்தாட்டம்

    திருப்பூர்: 2 திருநங்கைகள்.. செம போதையில் தாராபுரம் பஸ் ஸ்டேண்டில் குத்தாட்டம் போடுவதை கண்டு பொதுமக்கள் உறைந்து நின்றனர். தமிழக அரசின் நிகழ்ச்சி ஒன்றிலேயே இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது அதைவிட ஷாக்காக உள்ளது!

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவினை வலியுறுத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக வட்டாட்சியர் , கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் சிறப்பு அதிகாரிகளின் மூலம் கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடானது. இதனை பொதுமக்கள் அதிகமாக கூடும் இடமான தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் நடத்தவும் முடிவானது.

    கலை நிகழ்ச்சிகள்

    கலை நிகழ்ச்சிகள்

    அதன்படி நிகழ்ச்சியும் தொடங்கியது. இதில், தப்பாட்டம், கரகாட்டம், மற்றும் மேடை நாடகம் மூலம் பொதுமக்களுக்கு வாக்களிப்பது எவ்வளவு முக்கியமான கடமை என்று உணர்த்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.

    குத்தாட்டம்

    குத்தாட்டம்

    அந்த சமயத்தில் 2 திருநங்கைகள் பஸ் ஸ்டாண்டில் கலை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தனர். வரும்போதே அவர்கள் போதையில் இருந்தனர். அதனால் தள்ளாடியபடியே வந்தவர்கள், கலை நிகழ்ச்சி நடப்பதை கண்டு குத்தாட்டம் போட ஆரம்பித்துவிட்டனர்.

    முகசுளிப்பு

    முகசுளிப்பு

    பொதுமக்களில் சிலர் இதை கண்டு களித்தாலும், திருநங்கைகளின் குத்தாட்டத்தை எந்த அதிகாரிகளும் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்களே என்று அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திருநங்கைகளின் ஆட்டமும் முகசுளிப்பை ஏற்படுத்தியது.

    பொதுமக்கள் முனகல்

    பொதுமக்கள் முனகல்

    இது என்ன கலை நிகழ்ச்சியா? அல்லது திருநங்கைகளின் இனாம் கேட்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியா ? என்று நொந்து கொண்டனர். இப்படி எல்லாம் அரசின் பணம் வீணாவதுடன், இதனால் ஒரு புண்ணியமும் ஏற்பட போவதில்லை என்று முனகி கொண்டே மக்கள் அங்கிருந்து நகர ஆரம்பித்துவிட்டனர்.

    English summary
    In Voting Awareness Function Two Transgenders danced in Tharapuram Bus Stand
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X