திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடுமலை ஆணவக்கொலை அப்பீல் வழக்கு தீர்ப்பு டைம் லைன் : தூக்கு தண்டனை உறுதியாகுமா?

syn: சாதி மாறி திருமணம் செய்த உடுமலைப் பேட்டை சங்கர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைகளை

Google Oneindia Tamil News

திருப்பூர்: உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை அவ்வளவு சீக்கிரம் தமிழக மக்களால் மறந்து விட முடியாது. சாதி மாறி திருமணம் செய்து கொண்டதற்காக மகள் கவுசல்யாவையும் மருமகன் சங்கரையும் கூலிப்படையை வைத்து பட்டப்பகலில் வெட்டிச்சாய்த்தனர். கடந்த 2016 மார்ச் 13ஆம் தேதியன்று உடுமலையில் நிகழ்ந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கவுசல்யா படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்றுக் குணமடைந்தார். தன் கண் முன்னாலேயே கணவன் ரத்த வெள்ளத்தில் சரிந்ததை பார்த்து பல நாட்களில் தூங்காமல் இருந்துள்ளார் கவுசல்யா.

Recommended Video

    உடுமலை சங்கர் கொலை வழக்கு: 5 பேரின் தண்டனை குறைப்பு
    Udumalpet Shankar murder case appeals Judgement Day - Time line

    நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு திருப்பூர் நீதிமன்ற நீதிபதி தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கவுசல்யா தந்தை சின்னசாமிக்கு மரண தண்டனை மற்றும் 10 ஆண்டு கடுங்காவல், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கவுசல்யா தந்தை சின்னசாமியை தவிர மற்ற அனைவரும் கூலிப்படையாக செயல்பட்டவர்கள் என்றும் நீதிபதி அலமேலு நடராஜன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வெளியானது. மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். உடுமலை சங்கர் கவுசல்யா காதல் திருமணம், ஆணவக்கொலை, தீர்ப்பு பற்றி ஒரு சின்ன ப்ளாஷ் பேக் டைம் லைன்.

    • திருப்பூர் மாவட்டம் குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர் பொறியியல் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார்.

     உடுமலை சங்கர் கொலை வழக்கு: கெளசல்யா தந்தை விடுதலை- 5 பேரின் தூக்கு ஆயுள் தண்டனையாக குறைப்பு உடுமலை சங்கர் கொலை வழக்கு: கெளசல்யா தந்தை விடுதலை- 5 பேரின் தூக்கு ஆயுள் தண்டனையாக குறைப்பு

    •சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர்.

    • கடந்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே மனைவி கவுசல்யாவுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக இருவரையும் வெட்டி சாய்த்து தப்பித்து சென்றது. இந்த காட்சி அருகில் இருந்து சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ காட்சி வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

    • இந்த தாக்குதலில் சங்கர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே மரணமடைந்தார். படுக்காயங்களோடு கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கணவரை கொன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்று கவுசல்யா போராடினார்.

    • இந்த வழக்கு தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, கவுசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 11 பேரைக் போலீசார் கைது செய்தனர்.

    • சங்கர் கொலை வழக்கு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான திருப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு வந்தது.

    • ஆணவக்கொலையில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளில் 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டு 2017 டிசம்பர் 13 இல் தீர்ப்பு வெளியானது.

    • கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

    • ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த 11-வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணவரை கொன்றவர்கள் பெற்றோர்கள், உறவினர்கள் என்று தெரிந்தும் கடைசி வரை போராடி வெற்றி பெற்றார். கவுசல்யா.

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக கவுசல்யாவுக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் விதவைகளுக்கான ஓய்வூதியம் அகவிலைப்படி உட்பட மாதந்தோறும் ரூ. 11.500 வழங்கப்பட்டது. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

    • சங்கரின் தந்தைக்கு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பெருமாள்புரம் பகுதியில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் சமையல்காரர் பணியும் ஒதுக்கப்பட்டது.

    •2018 ஜனவரி 25ஆம் தேதி ஆணவக்கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீர் மரணமடைந்தார்.

    • 2018 பிப்ரவரி 26ஆம் தேதி இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    • 2018 டிசம்பர் 9 ஆம் நாள் சக்தி என்பவரைக் கௌசல்யா மறுமணம் செய்துகொண்டார்.

    • 2020 ஜூன் 22 சங்கர் ஆணவக்கொலை தீர்ப்புக்கு எதிரான அப்பீல் வழக்கின் விசாரணை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. ஆறு நபர்களுக்கும் தூக்கு தண்டனை உறுதியாகுமா அல்லது தண்டனை குறைக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பேருக்கான மரணதண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    • முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியை விடுதலை செய்து வழக்கில் இருந்து விடுவித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    English summary
    Udumalaipettai Shankar was hacked to death on March 13, 2016 for having married his collegemate C. Kowsalya,Tirupur court, handed the death sentence to six persons, The case was considered an ‘honour’ killing. Five accused, one was awarded the life sentence, one got a five year jail term.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X