திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காலையிலயே திருப்பூரில் குவிந்த கூட்டம்.. தடுப்பூசி பற்றாக்குறையால் ஏமாற்றத்துடன் திரும்பிய சோகம்

திருப்பூரில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

திருப்பூர்: தடுப்பூசியை செலுத்தி கொள்ள காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.. ஆனால், தடுப்பூசி இல்லாததால், அத்தனை பேரும் ஏமாற்றத்தில் திரும்பி சென்றுள்ள சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட கோவையை போலத்தான்.. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை இங்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது.

அதாவது ஒரு நாளைக்கு 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.. இதனால் பொதுமக்கள் பயந்து போனார்கள்..

பாதிப்பு

பாதிப்பு

இதையடுத்து, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக தீவிரப்படுத்தப்பட்டது... மேலும் லாக்டவுன் போடப்பட்டுவிட்டதால், இது ஓரளவு பலன் தர ஆரம்பித்தது. அந்த வகையில், தொற்று பாதிப்பு இப்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. நேற்று 853 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. இப்போதைக்கு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 899 ஆக உயர்ந்துள்ளது...

ஆர்வம்

ஆர்வம்

ஆனால், சிகிச்சையில் இருந்த 13 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துவிட்டனர்.. எனவே, மொத்த பலி எண்ணிக்கை 625 -ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே., திருப்பூர் மாவட்ட மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 9 அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் என பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

 தடுப்பூசிகள்

தடுப்பூசிகள்

ஆனால், பொதுமக்கள் திடீரென தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டியதால், மாவட்டம் முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது.. இதனால் சில இடங்களில் தடுப்பூசி போடும் பணியும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை, திருப்பூர் மாவட்டத்திற்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, பொதுமக்கள் காலை 6 மணியில் இருந்து திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள 19 சுகாதார நிலையங்களிலும் குவிய தொடங்கினர்..

 கோரிக்கை

கோரிக்கை

ஆனால் மக்கள் ஒரேயடியாக குவிந்து விட்டதால், அனைவருக்குமே தடுப்பூசி செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.. இதையடுத்து, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

English summary
Vaccine shortage in Tiruppur District
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X